பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283 திரிகையில், அடியில் சும்மா கிடக்கும் கல்லும் மாவு திரிக்கிறது. -டென்மார்க் வேலை முடியவில்லை; உன் கைகள் இரண்டும் மார்பின்மீது துக்கி வைக்கப்படும்வரை உனக்கு வேலையுண்டு. -எஸ்டோனியா எனக்கு எது ரொட்டி அளிக்கின்றதோ அது எனக்குக் கடவுள். - -ஃபின்லந்து செய்வதை திருந்தச் செய், இருமுறை செய்ய இடம் வைக்க வேண்டாம். -இங்கிலாந்து வேலையில்ை செல்வம் பெருகுவதற்குப் பதிலாக ஒருவனுக்கு முதுகில் கூனல் ஏற்படலாம். -ரஷ்யா ஆரம்பம் கஷ்டம், நடுவில் எளிது, முடிவில் இன்பம். -எஸ்டோனியா வீட்டின் கதவுக்குத்தான் கடுமையான வேலை. -லெக் வண்டி செல்லும்பொழுது பாரம் தெரியாது. -எஸ்டோனியா கொட்டாவி விட்டுக்கொண்பட வேலை செய்யாதே, கண்னே முடிக் கொண்டு ஓடாதே. -எஸ்டோனியா அதிக வேலைக்காரர்கள் அதிக எதிரிகள். -லத்தீன் பல விஷயங்களை நினைக்கலாம்; ஒன்றையே செய்ய வேண்டும். -அமெரிக்கா வந்தவர்களுக்கெல்லாம் கதவு திறப்பவன் நல்ல காவற் காரனல்லன். -சுவீடன் வேலைக்காரனுக்கு நீ நல்ல உணவு கொடுத்தால், பசு அதிகப் பால் கறக்கும்; பூனேயும் குறைவாகப் பால் குடிக்கும். -சுவீடன் ஒருவனுக்கு மேலாக மற்ருெருவனைத் துாக்கிவிடுவது வேலை தான். -ஆப்பிரிக்கா சரியாகச் செய்யாத வேலையை இருமுறை செய்ய நேரும். -இங்கிலாந்து குதிரைகளைப்போல் வேலை செய்துவிட்டு, நாய்களைப்போல் சண்டையிட வேண்டாம். -இங்கிலாந்து முடிவுதான் வேலைக்கு உரைகல். -வாஷிங்டன்