பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 இன்று செய்த நன்மை நாளைய இன்பம். -ஸ்பெயின் நல்ல மணி நெடுந்துராம் கேட்கும் கெட்டமணி அ கவிட அதிகத் துாரம் கேட்கும். -ஃபின்லந்து உடுத்திவரும் பட்டைப் பூச்சி அரிப்பதில்லை. -ஸெர்பியா நாம் கைகளை உபயோகித்தால் அறிவு :பெறுகிருேம்; மூளையை உபயோகித்தால் வலிமை பெறுகிருேம்: இதயத்தை உபயோகித்தால் இரக்கம் பெறுகிருேம். -ஸெர்பியா வியாபாரம் விற்க வேண்டியவைகளை மலர்களால் அலங்கரித்து வை. -ஜப்பான் கூட்டு வியாபாரம் குடுமிப் பிடி. -இந்தியா கடைத் தெருவில் தாய் யார், தந்தை Այrrri? -துருக்கி கொள்முகல் செய்வதற்குமுன்னல், விற்பனை பற்றி யோசனை செய். -சீன நீ ஏமாருமலிருக்க வேண்டுமானல், மூன்று கடைகளில் விலை விசாரிக்க வேண்டும். -சீன சிரித்த முகமில்லாதவன் கடை வைக்கக் கூடாது. -சீன ரொக்கம் கொடுத்து வாங்குபவன் பங்காளிபோல் நடத்தப் படுவான். -ஆப்பிரிக்கா கழுதையைப் பற்றிக் குறைசொல்பவனே அதை வாங்குவான். -அல்பேனியா சரக்கை நிறையக் கேட்டால், விலையைக் குறைக்கலாம். -இங்கிலாந்து கம்பளம் விற்பவன் கம்பளம் வாங்குவோனைத் தெரிந்திருப் பான். -இங்கிலாந்து நல்ல மதுவுக்கு விளம்பரம் தேவையில்லை. -இங்கிலாந்து சந்தைக்குப் போன மட்டப் பொருள்களையும் வாங்க ஒரு குருடன் இருப்பான். == -அயர்லந்து கம்பளம் வாங்கப் போனவன், தன் உரோமத்தையும் இழந்து விட்டு வருவதுண்டு. -ஸ்காட்லந்து