பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

தத்துவஞானமே தலைசிறந்த சங்கீதம். — பிளேட்டோ

தத்துவம் வழி காட்டும், அடையவேண்டிய லட்சியம் ஞானம்.

-லத்தீன்

கலைகளுக்குத் தாய் தத்துவ ஞானம்.

-லத்தீன் மனத்திற்கு உண்மையான மருந்து தத்துவஞானம். - லத்தீன் சுதந்தரத்தை அனுபவிக்கவேண்டுமானால், தத்துவஞானத்திற்கு அடிமையாயிருக்க வேண்டும். -லத்தீன்

தாடி பேன்களை உண்டாக்குமே ஒழிய அறிவை உண்டாக்காது.

- கிரீஸ்

தாடியிருந்தால் போதும் என்றால், வெள்ளாடும் சமயப் பிரச்சாரம் செய்யலாம்.

-டென்மார்க்

ஆன்மா

மலர்களில் மணம் போலவும், எள்ளில் எண்ணெய் போலவும். விறகில் தீயைப் போலவும், பாலில் நெய் போலவும், கரும்பில் இனிமை போலவும், உடலில் ஆன்மாவை ஞானிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். - இந்தியா

அது நீதான்.

- இந்தியா

உடலை அதிகம் போற்றினால், ஆன்மாவுக்குக் கேடு.

- போலந்து அவசியமானால் உன் உடைகளைப் பற்றிக் கவனிக்காமலிருக்கலாம், ஆனால் ஆன்மாவைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். -மார்க் ட்வெயின்

சிறு உடல்கள் பெரிய ஆன்மாக்களைப் பெற்றிருக்கின்றன.

- இங்கிலாந்து

ஆன்மா விதைத்தது எதுவும் அவமாகாது.

- இங்கிலாந்து ஆன்மா நித்தியமானது, அதற்குப் பல உடல்களாகிய உடைகள் வரிசையாக உடுத்தப் பெறுகின்றன. -பிளேட்டோ நமது நெஞ்சினுள்ளே ஒரு தெய்வத்தன்மை உள்ளது.

-லத்தீன்