பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297 நீண்ட உபவாசத்தால் ரொட்டி மிச்சமாகாது. -டென்மார்க் எப்போதும் மிச்சப்படுத்திக் கொண்டிருப்பது எப்பொழுதும் வறுமையில் வாழ்வதாகும். -டென்மார்க் கந்தலுக்கு ஒட்டுப் போட்டால், அதைத் துாரப்போட வேண்டியதுதான். -எஸ்டோனியா பணப்பையைக் காப்பது கடவுளல்ல, அதைக் கட்டி வைத் திருக்கும். கயிறுதான். -ஸெர்பியா பணக்காரனவதற்குப் பணத்தைக் குவிக்கவேண்டியதில்லை; தேவைகளைக் குறைத்தாற் போதும். - ஸ்பெயின் உனக்குத் தேவையானதை வாங்கவேண்டாம்; எது இல்லாமல் முடியாதோ, அதை வாங்கினல் போதும். - ஸ்பெயின் சிக்கணமே சம்பாத்தியம். -இத்தாலி தகுதிக்குமேல் செலவு செய்பவன் தன் உயிரை முடித்துக் கொள்ளக் கயிறு தயாரிக்கிருன். -இங்கிலாந்து காசோடு காசு சேர்ந்தால், பல காசுகளாகப் பெருகிவிடும். -இங்கிலாந்து வருவதையெல்லாம் செலவு செய்பவன் பிச்சையெடுக்க வழி தேடுகிருன். -இங்கிலாந்து குண்டுசியை எடுக்கக் குனிய முடியாதவன் ஒரு பவுன்கூடச் சேர்க்க முடியாது. -இங்கிலாந்து .ெ ச ழி ப் பு அறுவடைக் காலத்தில் எலிக்கு நான்கு பெண்டாட்டிகள். -இந்தியா வீட்டில் கோதுமை யிருந்தால், மாமியாருக்குத் தினமும் விருந்துதான். -இந்தியா வாய்க்காலில் நீர் நிறைந்திருந்தால், கிணறுகளும் நிறைந் திருக்கும். -சீன செழிப்பு தாயையும் தந்தையையும் மறக்கச் செய்யும் -ஸ்பெயின் செழிப்பு பசியைக் கொன்றுவிடும். -ஸ்பெயின் உ. ப.-19