பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட ன் கடனைக் கொடுத்துச் சண்டையை விலைக்கு வாங்கு. -இந்தியா இரவிலும் வட்டி ஏறிக்கொண்டே யிருக்கும். -இந்தியா நோயாளியின் உணவும், கடன்காரன் வருமானமும் _ஒன்று போல. -இந்தியா உண்டதும் குடித்ததுமே லாபம், மிஞ்சியதெல்லாம் கடனுக்குப் போய்விடும். - -இந்தியா பட்டினி கிடத்தல் நண்பன்: கடன் வாங்குதல் பகைவன். ■ -இந்தியா கண்ணிர் விடுவதால், கடன் அடையாது. -ஜப்பான் யாத்திரை சென்ருல்தான் தீரும், கடன் அடைத்தால்தான் தீரும். -துருக்கி கையால் கொடுத்ததைக் க ா லா ல் வாங்கவேண்டும். (கொடுத்ததை வ்சூலிக்கப் பன்முறை நடக்கவேண்டும்) -அரேபியா அடகு வைப்பதைவிட விற்று விடு. -அரேபியா அதிகமாகக் கடன் வாங்குபவன் அதிகமா யிழப்பவன், + —3% பிரான்ஸ் உனக்கு உபதேசம் செய்பவர்கள், உன் கடன்களைச் செலுத்த மாட்டார்கள். -ஃபிரான்ஸ் கடன் அடைப்பவன் தன் முதலைப் பெருக்குகிருன். -ஜெர்மனி பழைய கடனுக்கு ஒரு துரும்பு கிடைத்தாலும் பெற்றுக் கொள்; இல்ல்ாவிடில் விக்கிலுக்குத்தான் லாபம். -( ' ) கடன்களே நம் வாரீசுகள். -ஜெர்மனி குத்தகைகளும், வட்டிகளும் உறங்குவதே யில்லை. -ஜெர்மனி கடன்களும் பாவங்களும் நாம் நினைப்பதைவிட அதிகமாகவே யிருக்கும். -இங்கிலாந்து கடன் கேட்க வருபவனை யாரும் வரவேற்க மாட்டார். -அயர்லந்து