பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305 நாட்பட்ட கடன் தீர்ந்து போனமாதிரிதான். -வேல்ஸ் கடன்களோடு வாழ்வதைவிட இரவில் சாப்பிடாமல் படுப்பது நலம். -லெக் கடனுக்கு வாங்கியதெல்லாம் மலிவாகவே தெரிகிறது. -லெக் செலுத்தாக கடன்கள் மன்னிக்கப் பெருத பாவங்கள். -லெக் நாம் உண்ணும்போது அதே தட்டிலிருந்து நம் கடன்களும் உண்ணுகின்றன. -ஸெக் கடன் பலரை மேலே துரக்கிவிடும்; பலரைக் கீழே அமுக்கியும் விடும். -டென்மார்க் கொடுக்கமாட்டாத கடன்காரர்களிடம் கருசிய கருவாடுதான் கிடைக்கும். -டென்மார்க் கடனைத் திருப்பிக் கொடுத்தவன் மறுபடி வாங்க முடியும். -ஹாலநது கடன்காரன் பன்முறை பொய் சொல்ல வேண்டி யிருக்கிறது. -ஹங்கேரி கடனில்லாதவனே சீமான். -ஹங்கேரி கொடுக்க முடியாத கடன்காரரிடம் கிடைத்தது ஆதாயம். நீ கடன் கொடுக்கும்போது அவர்கள் உன்னை வணங்கினர்கள்: வசூலிக்கும்போது நீ அவர்களை வணங்க வேண்டும். -ரண்யா கடனுக்கு அழகு திருப்பிக் கொடுத்தல். -ரஷ்யா காலையில் அதிக நேரம் உறங்குவோன் ஒரு கடன்காரனிடம் தலையணையை இரவல் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். (கவலையால் உறங்காத கடன்காரனின் தலையணைகூட உறக்கத்தைத் தொலைத்துவிடும்.) -ஸ்பெயின் கடன்கள் குழந்தை மாதிரி; குறைவான கடன்கள் அதிகக் கூச்சலிடும். -ஸ்பெயின் யசமானருக்குக் கடன்கள் ஏறிவிட்டால், வேலைக்காரர்கள் திருடர்களாவார்கள். -ஸ்பெயின்