பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309 ஏழைகள் உணவைத் தேடுகின்றனர், செல்வர் பசியைத் தேடுகின்றனர். -இந்தியா பசியுடையவர்கள் கொட்டாவி விடுகிருர்கள், திருப்தியாக உண்டவர்கள் ஏப்பம் விடுகிரு.ர்கள். * -ரஷ்யா பசியா யிருக்கையில் யூதன் பாடுகிருன், குடியானவன் தன் மனைவியை அடிக்கிருன். -ரவி:யா நிறைந்த வயிற்றுக்குப் பசி ஒன்று இருப்பதாகவே நம்பிக்கை கிடையாது. -இத்தாலி பசியுள்ள குதிரை அடிப் புல்லைக் காலியாக்கி விடும். * -ஃபிரான்ஸ் தொட்டி வரண்டிருப்பதைக் குருட்டுக் குதிரையும் அறியும். -நீகிரோ பசியுள்ள நாய் தடிக்கு அஞ்சாது. -இங்கிலாந்து பசியுள்ள மனிதன் கோபமுள்ள மனிதன். -இங்கிலாந்து பஞ்ச காலத்தில் எல்லாம் நல்லதுதான். -இங்கிலாந்து பசியும் குளிரும் மனிதனை எதிரியிடம் ஒப்படைக்கின்றன. -இங்கிலாந்து பசியுள்ளவன் சமையற்காரனைக் குற்றம் சொல்வதில்லை. -இங்கிலாந்து வாளினும் கூர்மையுள்ளது பசி. -இங்கிலாந்து வயிறுதான் நம்மை வேலை செய்யத் துாண்டுகிறது. —( " ) பசியுள்ள கரடி நடனம் செய்யாது. -துருக்கி உணவு விடுதிக்காரனுக்கு உன் பசி எவ்வளவு அதிகம் என்பதைப் பற்றிக் கவலையில்லை. -சீன பதினைந்து நாட்களுக்கு முந்திச் செய்த ரொட்டிக்கு இருபத் தொரு நாட்களாக உள்ள பசி வேண்டும். -ஃபிரான்ஸ் பசி ஒரு கடன்காரன், வாங்கினலொழிய மீளமாட்டான். -ஜெர்மனி பசியுள்ளவனின் புன்னகை பொய்யானது. -போலந்து பசியுள்ள கண் நெடுந்துாரம் பார்க்கும். -அயர்லந்து பசிக்கு ரொட்டியைத் தவிர வேறு எதுவும் கண்ணில் படாது. -பல்கேரியா