பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 ஆரோக்கிய முள்ளவனைப்போல் உண்ணவேண்டும், ஆனல் நோயாளியைப் போல் (சொற்பமாக) மதுவருந்த வேண்டும். -ஜெர்மனி மனிதன் எதை உண்கிருனே அதன்படி மாறுகிருன். -( ' ) தேநீரில் முதல் கோப்பை பயனில்லை, அடுத்தது இன்பமளிக்கும், மூன்ருவது தேவையற்றது. -ஆப்பிரிக்கா விலையைச் சொன்னல், உண்பதின் சுவை போய்விடும். -ஃபிரான்ஸ் பல தலைமுறைகளாக ஒரு குடும்பம் நிலைத்திருக்க வேண்டு மால்ை, ஒரே வழிதான் உண்டு: கீரைத் தண்டுகள் இனியவை என்று கருதவேண்டும். - -சீன வெண்ணெய்தான் உயிர். -இந்தியா ஒரு முஸ்லிம் தனியாகப் பிரயாணம் செய்தால், உடல் பருத்து விடுவார்; இருவராய்ச் சென்ருல், மெலிந்துவிடுவார். = சீன- گي வாய் உண்ணும்போது வயிற்றைக் கலந்துகொள்ள வேண்டும். எருதுக்கு உணவளித்த கைதான். அது வளர்ந்து கொழுத்த வுடன், கத்தியேந்தி நிற்கிறது. -சீன நிறைய உணவும், ஒரு கிண்ணம் தேநீரும் அருந்தியபின். ஒருவன் அமரனுக்கு நிகராவான். சாப்பிடுகையில் அளவைப் பாராதே. -சீன இருவர் உணவை ஒருவன் உண்டால், அவன் மூவர் வேலையைச் செய்யவேண்டும். -குர்திஸ்தானம் மனிதர்கள் கொல்வதைக் காட்டிலும், கடவுளால் கொல்லப் பட்டவை மேலானவை. -ஐரோப்பிய நாடோடிகள் பலரோடு சென்று, வலரோடு உண்ணவும். -ஆப்பிரிக்கா அதிகமாக உண்பவன் உறங்குவான். -ஜைனம் பகுத்த வயிற்றுக்கு மெலிந்த மூளைதான் அமையும். -ஜெர்மனி 30-.ப مبيعته