பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

வானத்திலிருந்து தங்கமாக மழை பெய்யும் பொழுது. உன் துணிகளை யெல்லாம் விரித்து ஏந்திக்கொள்.

— கீழைநாடுகள்

அதிருஷ்டம் நமக்குத் தூக்கத்தில் வரும்.

— ஃபிரான்ஸ் அதிருஷ்டமுள்ள மனிதன் வாயைத் திறந்துகொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் போதும். —ஜெர்மனி அதிருஷ்டம் சிற்றோடையாக வந்தால்,துரதிருஷ்டம் காட்டாறாக வரும். — அயர்லந்து அதிருஷ்டமுள்ளவன் அழகன்தான். — அயர்லந்து அதிருஷ்டமும் துரதிருஷ்டமும் ஒரே கிணற்றில் தொங்கும் இரண்டு வாளிகள்; ஒன்று மேலே வந்தால், மற்றது கீழே தாழும். —டென்மார்க் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்துக் கொண்டுவந்து கொடுக்கும். —தமிழ்நாடு ஆசையிருக்கிறது தாசில் பண்ண, அதிருஷ்டமிருக்கிறது கழுதை மேய்க்க! — தமிழ்நாடு பல்லக்கேற ஆசையுண்டு, உன்னியேறச் சீவனில்லை. — தமிழ்நாடு அதிருஷ்டம் என்ற பசு சிலருக்குத் தலையைக் காட்டும், சிலருக்கு வாலைக் காட்டும். —இத்தாலி அதிருஷ்டம் ஒருவனை அதிகமாய்த் தட்டிக் கொடுத்தால் அவன் மூடனாவான். —லத்தீன் அதிக அதிருஷ்டம் அபாயமானது. —ரஷ்யா

அறிவில்லாதவனுக்கு வரும் அதிருஷ்டம், பயனற்றதாகும்.

-ரஷ்யா

இளமையான பசு கிடைக்கும் பொழுது, கயிறு தயாராயிருக்கட்டும்.

—ஸ்பெயின் அதிருஷ்டம் வரும்போது முண்டிக்கொண்டு வரும். — ஸ்பெயின் நைல் நதியில் தள்ளினாலும், அவன் வாயில் ஒரு மீனோடு வெளியே வந்து விடுவான். — அரேபியா