பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலகம்

புதிய உலகம் வேண்டும் என்று விரும்புகிறவன், முதலில் பழைய உலகை விலைக்கு வாங்கவேண்டும். —ஹாலந்து

உலகம் அனைத்தும் நித்தியமான கடவுளர்களின் கோயில்.

—ஸெனீகா

உலகம் உயர்ந்த உடையணிந்த திருமணப் பெண்; அவளை

மணந்துகொள்பவர் தம் ஆன்மாவைப் பரிசப் பணமாகக் கொடுக்க வேண்டும். —ஹாஃபீஸ் உலகத்தைவிட நீதியான ஒருவரை நான் கண்டதில்லை; நீ அவளுக்கு உதவி செய்தால், அவளும் உனக்கு உதவி செய்வாள்; நீ அவளைக் கைவிட்டால், அவளும் உன்னைக் கைவிடுவாள். — ஸூஃபி செவிடன் இருமுறை சிரிப்பான். —ஆப்கானிஸ்தானம் [மற்றவர் சிரிப்பதைப் பார்த்துத் தானும் சிரிப்பான். ஏன் சிரித்தார்கள் என்பதைக் கண்ட பிறகு மறுமுறையும் சிரிப்பான்.]
இந்த உலகத்தின் அமைப்பில் நம்பிக்கை வைப்பவன் காகிதம் கப்பலில் கடல் யாத்திரை செய்பவன். —( ) உலகம் யாத்திரிகனின் சத்திரம். —ஆப்கானிஸ்தானக்

ஓநாயுள்ள இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

—ஜெர்மனி

உலகம் உன்னை விடுவதற்கு முன்னால், நீ அதை விட்டுவிடு.

— ஜெர்மனி

உலகம் நம்பிக்கையையும், மாமூல் வழக்கத்தையும் கொண்டு வாழ்கின்றது.

—செர்பியா மூடனுக்கு உலகம் இனிமையானது. —யூதர் உலகம் ஒரு நடனமாது; ஒவ்வொருவர் முன்னாலும் அது சிறிது நேரம் நடனமாடும். —எகிப்து கணக்கைப் பற்றிய மனிதனின் அறிவு சுருக்கம்; வானின் கணக்கில் பெரிய பெரிய தொகைகளே உண்டு. —சீனா