பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

பிரபஞ்சத்தைப் படைத்த பிரபுவே! சுவர்க்கத்திலிருந்து இறங்கி வந்து, நீர் படைத்த உலகைப் பாரும்! — யூதர்

வெகுமதி, தண்டனை- இவை இரண்டுமே உலகை ஆளுகின்றன.

—அமெரிக்கா

உலகம் அனைத்தும் ஓர் கனவு போன்றது.

— அமெரிக்கா உலகம் ஓர் ஏணி; சிலர் மேலே ஏறுகிறார்கள், சிலர் கீழே இறங்குகிறார்கள். —இத்தாலி உலகம் அற்ப மூளைகளால் ஆளப்படுகின்றது. — இத்தாலி இந்த உலகிலிருந்து ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு எடுத்துக் கொள்கிறானோ, அவ்வளவு அவனுடையது. — இத்தாலி வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். உளறிக் கொண்டிருக்கும் உலகத்தை விடுங்கள்! — தாந்தே உலகம் எப்படி யிருக்கிறதோ அப்படியே கொள்ளுங்கள்; எப்படி இருக்கவேண்டும் என்று பாராதீர்கள். — ஜெர்மனி உலகம் முன்னைவிட அறிவு பெற்றிருக்கிறது. — ஃபிரான்ஸ் அங்கி அணிபவனுடையது, உலகம் அதை அனுபவிப்பவனுடையது. — இங்கிலாந்து ஒரு சமயம் துன்பம், ஒரு சமயம் இன்பம்; இவ்வாறு செல்கின்றது உலகம். —சாஸர் உலகம் ஒரு நாடக மேடை, ஆண் பெண் அனைவரும் அதில் நடிப்பவர்கள். —ஷேக்ஸ்பியர் உலகம் தான் ஏமாறவே விரும்புகிறது. — ஹாலந்து ஒருவன் தன் வீட்டைவிட்டு வெளியேறாமலே உலகைத் தெரிந்து கொள்ள முடியும். —லாவோத்ஸே உலகைப் பற்றிய அறிவை உலகிலிருந்துதான் பெறவேண்டும். அறையிலிருந்தன்று. —செஸ்டர்ஃபீல்டு பூமி, விருந்தினர்களுக்கு விருந்தளித்துவிட்டு, அவர்களை வதைத்து விடும். —பாரசீகம் பூமி, எல்லாப் பொருள்களையும் உண்டாக்கி, எல்லாவற்றையும் திரும்ப வாங்கிக்கொண்டு விடும். — இங்கிலாந்து