பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 காதல் சாதி வேற்றுமைகளைக் கண்டு சிரிக்கின்றது. -இந்தியா ஒரு மனிதன் பெண்ணின் பின்னல் ஒடினல் திருமணம்; ஒரு பெண் மனிதன் பின்னல் ஓடினுல் அவளுக்கு அழிவு. -இந்தியா காதல், கஸ்துாரி, இருமல் மூன்றையும் அடக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. -இந்தியா காதலன் கண்ணுக்கு அம்மைத் தழும்புகளும் அதிருஷ்டக் குறிகளாகும். -ஜப்பான் காதலுக்கும் தொழு நோய்க்கும் தப்புவோர் சிலரே. -சீன அதிருஷ்டமுள்ளவன் ஒரு நண்பனைச் சந்திக்கிறன், அதிருஷ் டம் கெட்டவன் ஓர் அழகியைச் சந்திக்கிருன். -சீன காதலையும் கர்ப்பத்தையும் மறைத்து வைக்க முடியாது. -அரேபியா காதல் ஏழு விநாடி, துக்கம் வாழ்க்கை முழுதும். -அரேபியா உன் காதலுக்கு ஒரு மணி நேரம், உன் இறைவனுக்கு ஒரு மணி நேரம் செலவிடு. -அரேபியா து.ாக்கம் வந்துவிட்டால், தலையணை தேவையில்லை: காதல் வந்து விட்டால், அழகு தேவையில்லை. -ஆப்கானிஸ்தானம் காதலும் பேராசையும் போட்டியைச் சகிக்கமாட்டா. -ஃபிரான்ஸ் காதலுடனும் நெருப்புடனும் மனிதன் பழகிப் போகிருன். -ஃபிரான்ஸ் பெண்கள், காடைகள், வேட்டை நாய்கள், ஆயுதங்கள் இவைகளில் ஒர் இன்பத்திற்காக ஆயிரம் வேத்னேகள் -ஃபிரான்ஸ் காதலைத் தடுத்தல் அதைத் துாண்டி விடுவது போன்றது. -பிரான்ஸ் காதல் வந்துவிட்டால், கழுதைகளும் நடனமாடும். —( ?” ) அதிகக் காதலுள்ளவர்கள் மிகக் குறைவாகப் பேசவேண்டும். -ஸ்காட்லந்து