பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காதைக் கொண்டு பெண்னைப் பார், கண்ணைக்கொண்டு பார்க்க வேண்டாம். -போலந்து கலியாணத்திற்குப் பெண் தேடி நெடுந்துாரம் செல்பவன் யாரையோ ஏமாற்றப் போகிருன், அல்லது தான் ஏமாறு வான். -இங்கிலாந்து பெண் எடுத்தல் பக்கத்திலும், களவாடுதல் துாரத்திலும் இருக்கவேண்டும். -ஸ்ெக் செழிப்பான பண்ணேயிலிருந்து குதிரையை வாங்கு: ஏழைப் பண்ணேயிலிருந்து ப்ெண்னை வாங்கு. -எஸ்டோனியா மாதா கோயிலுக்குச் செல்லும் பாதையிலிருந்துகொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே. ー(" ) ஒரு மனைவியைத் தேர்ந்தெடுக்க மனிதனுக்குப் போதிய நேரம் இருக்கிறது. -ஃபின்லந்து ஏழை வீட்டில் பெண் எடு, செல்வர் வீட்டில் குதிரை வாங்கு. -ஃபின்லாந்து எல்லாப் பெண்களிலும் உனக்கு மிகவும் அருகிலுள்ள பெண்னேயே மணந்துகொள். -கிரீஸ் குதிரைகள் வாங்கும்போதும், பெண் எடுக்கும்போதும், உன் கண்களை இறுக மூடிக்கொண்டு, கடவுளின் பொறுப்பில் விட்டுவிடவும். -லத்தின் முதலில் உணவுக்கு வழிசெய், பிறகு மனைவியைத் தேடிக் கொள்ளலாம். -நார்வே மணப் பெண் தொட்டிலிலிருக்கும் பொழுது, மணமகன் குதிரையேறப் பழகவேண்டும். -ரவியா உபதேசியாரிடம் குதிரை வாங்காதே, விதவையிடம் பெண் கொள்ளாதே. -ரவி; யா உனக்கு நல்ல மனைவி வேண்டுமானல், அவளை ஞாயிற்றுக் கிழமையில் தேர்ந்தெடுக்காதே. -ஸ்பெயின் பெரிய இடத்துப் பெண்ணை விவாகம் செய்து கொண்டு, பாயில் படுத்துறங்கு. -ஆப்பிரிக்கா