பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 மனிதன் தன் மனைவியைத் தவிர, மற்ற எதைப்பற்றிப் பேசி லுைம், பொறுத்துக் கொண்டிருப்பான். -பாரசீகம் உளமையான மனைவி கணவனிடம் அடிபடுவதே யில்லை: -ஃபிரான்ஸ் தேனிரை மனைவியாக உடையவன் சந்தோஷமாக யிருப்பான். (சுறுசுறுப்புள்ள மனைவியால் ஆக்கம் பெருகும்.) -ஜெர்மனி ஃபிடிலைப் போல் பெண்ணை மீட்டிவிட்டு உயரே துாக்கி வைத்துவிட முடியாது. -ஜெர்மனி குடியானவன் தன் மனைவியை அடிக்காவிட்டால், அவளுடைய ஈரல் அழுகிப் போகும். -போலந்து வயோதிகனுக்கு வாய்த்த இளம் மனைவி அவன் நரகத்திற்கு ஏறிச் செல்லும் குதிரை. -போலந்து மனைவியர் இளைஞருக்கு நாயகிகள், வயோதிகருக்குத் தாதிகள். -இங்கிலாந்து உண்மையான வீட்டுக்காரி அடிமையாகவும் இருப்பாள்; வீட்டு அதிகாரியாகவும் இருப்பாள். -போஸ்னியா ஒழுகும் கூரையும், புகையடையும் கூண்டும், ஒயாமல் சண்டையிடும் மனைவியும், ஒருவனை வீட்டை விட்டுக் கிளப்பிவிட முடியும். -வேல்ஸ் ஒரு குற்றமுள்ள மனேவி வேண்டாமென்றில், இரு குற்ற முள்ளவள் வந்து சேருவாள். -வேல்ஸ் என் முதல் மனைவி மனைவியா யிருந்தாள்: இரண்டாமவள் என் எசமானியா யிருந்தாள்; மூன்ருமவளே நான் சிலுவை போல் வைத்துக் கும்பிடுகிறேன். -பல்கேரியா அடங்காப்பிடாரி ஒருத்தி இருந்தால் போதும்-சுற்றிலும் பத்து வீடுகளுக்குக் காவல் நாய் தேவையில்லை, -ஸெக் தாடி ஒரு மனிதனுக்குக் கெளரவம், மனைவி அவன் கருவி. எஸ்டோனியா குருட்டுக் கோழிக்கும் ஒரு தானியம் கிடைக்கின்றது: குடிகார னுக்கும் ஒரு மனைவி கிடைக்கிருள். -எஸ்டோனியா