பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கட்டிடம் கட்டுதல் இனிமையாக எளிமையடையும் வழி . -இங்கிலாந்து வீட்டைக் கட்டிப் பாராதவன் மண்ணிலிருந்து சுவர்கள் முளைத்திருப்பதாக எண்ணுவான். -எஸ்டோனியா வீடு இல்லாளின் உலகம், உலகம் மனிதனின் வீடு. — ” ) நிலைப்படியிலே அமர்ந்திருப்பவன் எல்லோருக்கும் தடையா யிருப்பான். -நார்வே வீட்டுக்குக் கேடு வருவது பின் கதவினால்தான். -ரஷ்யா நம் வீடு இறைவனுடையது. -செர்பியா வீட்டை விட்டு ஓடுபவன் வீட்டுக்கே திரும்பி வருவான். -ஸ்பெயின் ஒரு வீட்டை வாங்குமுன், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ேவண்டும். -யூதர் ஒவ்வொரு விலங்கும் தன் குகையில் உறுமும்-ஆப்பிரிக்கா வீட்டைப் பெருக்குவோன் துடைப்பத்தின்மீது அமரக்கூடாது. -ஆப்பிரிக்கா தன் வீட்டுக்குத் திரும்பிவரும் மனிதன் தீய சகுனங்களை பொருட்படுத்த மாட்டான். -ஆப்பிரிக்கா பாழடைந்த வீட்டிலெல்லாம் ஒரு பேய் இருக்கும் -எகிப்து வீடு அன்பு நிறைந்த இடம். -ஆப்பிரிக்கா பாதி வீட்டில் குடியிருந்தால் பாதி நரகம். -ஜெர்மனி பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம். -ஜெர்மனி ஒரு கழியைக் கொண்டு எப்படி வீடு கட்ட cքւգաւն: -சீன கட்டிய வீடு கிடைக்கும், ஆனால் மனைவியை நாம்தான் கட்டிக் கொள்ள வேண்டும். -இங்கிலாந்து மனிதனுக்குத் தன் வீடுதான் மாளிகை. -இங்கிலாந்து முறையில்லாத வாடகைக்காரனைவிட, காலி வீடே மேலா னது. -இங்கிலாந்து