பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 என் இதயம் என் மகனை நோக்கிச் செல்கின்றது. அவனு டைய இதயமோ ஒரு கல்லை நோக்கிச் செல்கின்றது. -அரேபியா மகள் இருந்தால், தாய்க்குச் செலவு இருந்து கொண்டே யிருக்கும். -ஆர்மீனியா உன் பிள்ளைகளையும் பெண்களையும் நம்பியிருந்தால், உனக்கு இரு கண்ணும் இல்லை. (நம்பியிருத்தல் வீண்.) -பர்மா தானகத் தடுக்கி விழுந்த குழந்தை அழுவதில்லை. -கால்மிக் குழந்தைகள் நிறைந்த வீட்டில் சயித்தான் ஆள்வதில்லை. -குதிர்ஸ்தானம் வீடு என்ருல், மூன்று குழந்தைகளாவது இருக்கவேண்டும். -குதிர்ஸ்தானம் இளமையிலே குழந்தைகள் நம் கைகளுக்கு வலியளிக்கும்; முதுமையிலே மனத்திற்கு வேதனையளிக்கும். m -ஐரோப்பிய நாடோடிகள் வைசூரி விளையாடிய பிறகுதான். பெற்ருேர்கள் குழந்தையைத் தங்கள் குழந்தையாகக் கணக்கிட வேண்டும். == -ஆப்கானிஸ்தானம் நன்றியற்ற மகன் தந்தையின் முகத்திலுள்ள பரு; அதை அப்ப்டியே விட்டிருந்தால் விகாரம், கிள்ளியெறிந்தால் வலி. -ஆப்கானிஸ்தானம் தந்தை அழ. நேருவதைவிட, குழந்தை அழுதால் அழட்டும். -ஜெர்மனி குழந்தைகளில்லாமல் வாழ்பவன் தொந்தரவுகளை அறியான். - குழந்தைகளில் லாமல் மரிப்பவன் மகிழ்ச்சியை அறியான். -ஜெர்மனி தாய் தன் குழந்தையைத் தழுவில்ை ஆநாதுைத் குழந் தையை ஆண்டவர் தழுவிக் கொள்கிருர் -போலந்து