பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ソム குழந்தைகளோடு சேர்ந்து விளையாடினல், அவர்களை எப்படியும் திருப்பலாம். -ஜெர்மனி குழந்தை அழாவிட்டால், தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை. -ரவி:யா குழந்தையை அடித்து வளர்க்காதவன். பின்னல் தன் மார்பிலே அடித்துக் கொள்ள நேரும். -துருக்கி தாய் தந்தையர் அன்னையின் அன்புக்கு வயதே கிடையாது. -ஜெர்மனி கோழி மிதித்தால், குஞ்சுக்கு சேதமில்லை. -தமிழ்நாடு தாய்வார்த்தை கேளாப் பிள்ளை நாய்வாய்ச் சீலை. -தமிழ்நாடு பசு உள்ள இடத்தில் கன்றும் இருக்கும். - -இந்தியா செல்வமுள்ள போது தந்தை, வறுமையிலே தாய். -இந்தியா தாய்க்கு உதவி செய்யாதவன் வேறு யாருக்கு உதவி செய்வான்? -இந்தியா புத்திசாலியான மகன் தந்தைக்கு மகிழ்ச்சி யளிப்பான், -பழைய ஏற்பாடு தந்தையின் கோபத்தைக்_கண்டு மகன் அஞ்சுவதில்லை; அவனுடைய மெளனத்திற்கே அஞ்சுகிருன். -சீன மகஜனப் புகழும் தந்தை தன்னையே புகழ்ந்து கொள்கிருன். -சீன ஒரு தந்தை பத்துக் குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம்: பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைப் பேணுவது அரிது. -சீன ஒரு தந்தை நுாறு ஆசிரியர்களுக்கு மேலாவார். -இங்கிலாந்து தந்தை தோட்டத்திற்குப் போனல், மகன் உழுவதற்குப் குழந்தைகளின் குற்றங்களை வெறுக்கும் தந்தையே அவர்கரே நேசிப்பவன். -ஃபிரான்ஸ்