பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 தந்தையின் வாழ்த்து நீருள் அழியாது, நெருப்பிலும் அழியாது -ரஷ்யா குதிரைகளும் மனிதர்களும் தாய் வழியைக் கொள்வார்கள். -இந்தியா அன்னை அவன் வயிற்றைப் பார்ப்பாள், மனைவி முதுகைப் பார்ப்பாள். -இந்தியா பசுவின் பின்னல் எப்பொழுதும் ஒரு கன்று இருந்து வரும்: சில சமயங்களில் அது சொந்தக் கன்ருயிருக்கும்: இல சமயங்களில் வேறு பசுவின் கன்ருயிருக்கும், ...கீழை நாடுகள் தாயும் தந்தையும் செல்லாத பாதையில் நீ செல்ல வேண்டாம் . -ஆப்பிரிக்கா குழந்தைகளின் இதயத்திலும் வாயிலும் வரும் கடவுளின் பெயர் தாய். -தாக்கரே தாய் எப்படி வளர்க்கிருளோ, அப்படி உருவாகிருர்கள் மனிதர்கள். -இங்கிலாந்து தயாரின் செல்லப்பிள்ளைகள் வெண்ணெய் வெட்டும் வீரர்க ளாகவே வருவார்கள். -இங்கிலாந்து குழந்தையைப் பெற்றவளெல்லாம் தாயாகிவிடமாட்டாள். -இங்கிலாந்து தாயில்லாத வீடு வீடாகுமா? -இங்கிலாந்து நடனத்தின் இதை நடுவிலும், தாய்க்குத் தன் குழந்தைகளின் அழுகுரலே கேட்கும். -ஜெர்மனி தாய்ப் பாலுடன் பருகியது சாகும்வரை உடலில் இருக்கும். -ஸ்பெயின் தாயிலே கெட்டவளுமில்லை, சாவிலே நல்லதுமில்லை. -யூதர் உங்களுடைய தந்தையையும் தாயையும் கெளரவியுங்கள். -பழைய ஏற்பாடு என் மகனே, உன் தந்தையின் போதனையைக் கேட்டுக் கொள்' உன் தாயின் சட்டத்தையும் புறக்கணிக்க வேண்டாம். - -பழைய ஏற்பாடு,