பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அந்தப் பத்து நிகழ்ச்சிகள் எவை?

1, உணவு தேடல், 2. ஜீரணித்தல் 3, சேகரித்தல், 4. வளர்த்தல், 5.மூச்சுவிடல்! 6. வேண்டாதவற்றை வெளியே தள்ளல், 7.குறைந்தவற்றை நிரப்புதல், 8. அசைதல், 9. உணர்தல், 10.இனப்பெருக்கம்.

ஆக இந்தப் பத்து விதமான நிகழ்ச்சிகளும் நடைபெறுமானால் உயிர் இயங்குகிறது எனலாம்.

இப்படி அறிவியல் சொல்கிறது. இந்தப் பத்து விதமான நிகழ்ச்சிகளையும் நிகழ்த்துவது எது? செல் அல்லது கருக்கூடு. கருக்கூடுகள் இவற்றைச் செய்கின்றன.

இதற்கான அடிப்படை எது? புரொடோபிளாசம்.

புரொடோபிளாசம் என்கிற உயிர்க்கஞ்சிதான் உயிரின் அடிப்படை. ஆகவே, ஜீவதாது என்று அதைச் சொல்வது சரியே.

புரொடோபிளாசேம் என்கிற ஜீவதாதுவை வளர்க்கத்தான் நாம் சாப்பிடுகிறோம். நமது உணவிலே பலவிதமான தாதுப்பொருள்கள் உள்ளன. தாவரங்கள் சேகரித்துக் கொடுத்த தாதுப் பொருள்கள். அவையே பற் பல