பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

அமீபாவை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்தால் என்ன காணலாம்? துடித்து நகர்வது காணலாம். அப்படி நகர்ந்து கொண்டிருக்கும்போதே அந்த அமீபா இரண்டாகப் பிரிந்துவிடும். ஒரு கருவட்டம் புரியும் செயல் அவ்வளவையும் இந்த அமீபாவும் செய்யும். அமீபா என்பது ஒரே கருவட்டத்தில் ஆன உயிர்ப்பிராணி.

நீண்ட காலம் வரையில் கடலிலே இந்த அமீபா போன்ற 'புரொடோசுவா' இனம் தான் இருந்தது.

அதன் பிறகு, கடற்பஞ்சு போன்றவை தோன்றின. இவை இரண்டு கருவட்டங்களால் ஆனவை. இந்த இனத்திற்கு 'போரி பரா' என்று பெயர். போரஸ் என்றால் துளை துளையாக உள்ளது என்று பொருள். போரிபராவும் புரொடோ சுவாவுமே சிறிது காலம் கடலில் இருந்தன.

அதன் பிறகு ‘கொயலன்டிராடா' இனம் தோன்றியது. கொயலன்டிராடா என்றால் குழாய் போன்ற குடல் உள்ளவை என்று பொருள். பவழங்கள் இந்த இனத்தில் சேர்ந்தவை.