பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

இம்மாகாணி, மாகாணி முதலிய வாய்ப்பாடுகள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார். எதுவும்என் மண்டையில் ஏறாது.

செவிட்டு வாத்தியார் கேட்பார்.

‘அசுவினி எப்படியடா இருக்கும்?’

‘அசுவினி ஆறும் குதிரைத் தலை போல’ என்று உரக்கக் கத்துவேன்.

ஏன்?

அது எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

செவிட்டு வாத்தியாருக்குச் சோதிடம் தெரியும். ஆதலினாலே அவருக்கு இதிலே விருப்பம்.

மணலிலே குதிரைத்தலை வரைவார்.

ஆறு பிள்ளைகளை அழைப்பார். அந்தக் கோட்டின் மீது நிறுத்துவார்.

'பாரடா! அசுவினி நட்சத்திரம்! இந்த மாதிரி தான் இருக்கும். இரவு, வானத்தைப் பாருங்கள். அசுவினியைக்கண்டுபிடியுங்கள். நாளை நான் கேட்பேன். பதில் கூற வேண்டும்’ என்பார்.

இப்படியாக இருபத்தி ஏழு நட்சத்திரங்களைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார்.