பக்கம்:உலகியல் நூறு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி முன்னுரை முன்னுரைக்கு முகவுரை : ஒரு சிறுகதையோ, புதினமோ, கட்டுரையோ அல்ல்து உகைந்தெழுந்த பாடலோ அல்லது பாவியமோ, - எது வாயினும், படைப்பாளியின் மன, உள்ள, அறிவுப் பண்பு களின் ஒட்டு மொத்தத் திரட்சியின் குளிகையமைப்பை (pill) அது பெற்றிலங்குவதைக் கூர்ந்து நோக்கின் விளங்கிக் கொள்ளலாகும். - ஓர் இலக்கிய வெளிப்பாட்டைக் காலத்தின் கண்ணுடி என்பதினும், அதைப் படைத்தவனின் புலம் படி கண்ணுடி' என்பதே, முதற்கண் பொருந்துவதாகும். படைப்பாளியான வன் எந்தச் செய்தியைப் புலப்படுத்தி யிருப்பினும், அதில் தன்னே, தன் உணர்வை, தன் அகப் பண்பை, தன் அறிவுத் தெளிவை ஒவ்வோர் எழுத்தின் வளேவிைேடும் பொருத்தி யிருப்பான் இந்நிலையை அவனே தவிர்க்க இயலாது ! ஏனெனில், தவிர்க்க முயன்றிருப்பின், அதைப் புறப்படுத்தா மலேயே அமைந்திருக்க வேண்டியதுதான் ! அவனின் மன உள்ள அறிவுத் திறத்திைேடு, தன் வாழ்க்கையையே எதில் ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தான் என்னும் ஒரு போலிகைப்படியைக்கூட (Specimen Copy) அவ் வெளிப்பாட்டில் விளங்கிக் கொள்ளலாம் ! உயர்ந்த நெஞ்சங்களின் உணர்வுக் கருவூலங்கள் யாவும் கால வெள்ளத் தில் கரந்தும் கரைந்தும் போகாது நிலைக்கின்றமையையும், உலர்ந்த நெஞ்சங்களின் உணர்ச்சிக் கருக்கூலங்கள் அவ்வக் காலத்தால் மெல்லாதேயே துப்பித் தொலைக்கப் பெற்றுப் போயினமையையும், அவற்றிற்கு அடிச்சுவடிகளே அற்று அழிந்தொழிந்தமையையும் இலக்கிய வரலாறுகள் தெளியக் காட்டுகின்றன !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/10&oldid=758145" இலிருந்து மீள்விக்கப்பட்டது