பக்கம்:உலகியல் நூறு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 உலகியல் நூறு 4. மாறுதல் நிலை விண்வளிதீ நீர்நிலமாய் விண்டுள் வியன்கலந்து கண்செவிவாய் மூக்குமெய்யாய்க் கால்மாறும் - எண்புலனுக் கெட்டா இணைமாற்றம் ஏய்ந்துணர்வார்க் கிவ்வுடற்கண் ஒட்டா துறையும் உயிர். 79 பொழிப்பு : விண், காற்று, தி, நீர், நிலம் என்னும் ஐம்பூதங்களாக உள்ளும் புறமும் விளங்கித் தோன்றி, வியப்புக்குரிய வகையில் தனித்தும் ஒன்றுடன் ஒன்று கலந் தும், பின் கண், செவி, வாய், மூக்கு, மெய் என்னும் ஐம் புலன்களாக அவை வழி நிலையான் மாறியும், அளவைக்கும், அறிவுக்கும் எட்டாமல் பொருந்தி யியங்குகின்ற தோற்ற மாற் றங்களே ஒன்றியிருந்து முருக உணர்கின்றவர்களுக்கு, ஊனிலே யான் நின்ற உடலின்கண் உயிர் முற்றப் பொருந்தாமல் தங்கி யிருக்கும். 5. ஒருங்கல் நிலை ஒன்ருற்றல் ஒன்றுபொருள் ஒன்ருேடொன் றுட்புறமாய் கின்ருற்றி நீங்கி நிகழ்வொடுங்கி - மன்றிருந்தே உள்வீறி ஓங்கி உலகாய் நடந்தொளிர்தல் கள்வீறிக் கண்டார் கணக்கு ! 80 பொழிப்பு : ஒன்று ஆற்றலாகவும் ஒன்று பொருளாகவும் இருந்து, ஒன்றினுள் ஒன்று கலந்து, அகமாகவும் புறமாகவும் நின்று பல்வகையான இயக்கங்களைச் செய்து, பின் அவ் வியக்க நிலைகளினின்று நீங்கி, நிகழ்ச்சிகளே ஒடுக்கிக் கொண்டு, காலமாகவும் இடமாகவும் அமைந்திருந்து, பின் மீண்டும் உள்ளெழுச்சி யுற்று முன் போலவே பல் வடிவாய் விளர்ந்து எழுந்து உலகமாயும், பிறவாயும் நடந்து தொடர விளங்கி யிருத்தல் என்னும் உண்மை, மூளையின் முருகிய நினைவால் முகிழ்த்த மெய்ப்பொருள் இன்ப ஒழுக்கைச் சுவைத்தறிந்தவர் கூறும் அளவையறி வாகும். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/100&oldid=758146" இலிருந்து மீள்விக்கப்பட்டது