பக்கம்:உலகியல் நூறு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HT பிறப்பியல் 1. உடல் நுகர்ச்சி நிலை விழிமின்பாய்ந் துள்வெதுப்ப வேண்மதநீர் ஓடிக் கழிபெருங்ற் காமம் கனப்பப் - பொழியன்பால் சொல்லிதழ்க்கை மொய்த்துர்ந்துள் ஒத்துச் சுரப்பாடி வல்லுறுத்துத் துய்த்தல் வரைத்து. 81 பொழிப்பு : விழிகள் ஒன்றை யொன்று கவ்வும் நோக் கில்ை தோன்றிய மின் தாக்குதல் போலும் ஒருணர்வு ஊடுருவி, இணேயத்தக்க ஆணும் பெண்ணுமாகிய இருவரின் உள்ளத்தையும் உடலேயும் வெதும்பலுறச் செய்ய, வேட்கை மதர்ந்த செந்நீர் இருவரின் நாடி நரம்புகளின் முழுதும் பாய்ந்தோடி, மிகவும் பெருகிய நல்ல காமவுணர்வைக் கனலுறச் செய்ய, ஒருவரை யொருவர் நெருங்கி, அன்பு பொழியும் உணர்வுடன் சொற்களேயும், வாயிதழ்களேயும், கைகளேயும் ஒருவர்மேல் ஒருவர் மொய்க்கச் செய்து, மேலிட்டுத் தழுவி உள்ளுணர்வும் உறுப்புகளும் ஒத்துச் சுரக்கும் நிலையில் அசைந்து கூடி, வலிழையொடு உறுத்துத் துய்க்கின்ற இன்பம், அளவொடு நிகழத்தக்க தாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/101&oldid=758147" இலிருந்து மீள்விக்கப்பட்டது