பக்கம்:உலகியல் நூறு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 உலகியல் நூறு 2. கரு நிலை வித்துசினை ஒன்றித்தாய் வேதுநீர் உள்வாங்கிப் பத்துமதி தாங்கிப் படர்ந்து - முத்தவிழ்ப்பாய் வாழும் உலகியற்கு வாய்த்த உறுப்புணர்வால் வீழும் வியப்பே வியப்பு. 82 பொழிப்பு : ஆணின் வித்தும், பெண்ணின் சினையும் பொருந்தித் தாயினது வெப்பமான அகட்டு நீரை உள் சுவறிக்கொண்டு, பத்து மாதங்கள் உயிரைத் தாங்கி யிருந்து, உருவம் மேவப் பெற்று முதிர்ந்து, சிப்பியினின்று முத்து அவிழ்வது போல், தான் உயிர்மெய்யாய் வாழப்போகும் உலக இயல்புகளுக்கு ஒத்த வகையில், உள் உறுப்புகளொடும் அவற்றிற்கேற்ற உணர்வுகளொடும், இம்மண்ணில் வீழ்கின்ற வியத்தகு வினேயே மிகவும் வியப்புக்குரிய தாகும். 3. உரு நிலே உடல்பொருந்தி அற்ருங் குளம்பொருந்தி ஒருங் திடல்பொருந்தித் தேவை தெளிந்து - கடலுலகில் ஏய்ந்த பருப்பொருளுக் கேற்ப வளருமே வாய்ந்த உயிர்மலர வந்து. 83 பொழிப்பு: உலகியலுக்கு ஒத்த உடலம் பொருந்தி, அவ் வளவில் அங்ங்னே உள்ளமும் பொருந்தி, நுகர்ந்தறியும் திறனும் அதனுட் பொருந்தி, தனக்குற்ற தேவைகளேத் தானே தேர்ந்து தெளிந்து கொண்டு, கடல் சூழ்ந்த இவ்வுலகில் நிறைந்து விளங்கும் பருப்பொருள்களுக் கேற்ற வகையில், வாய்ப்பினுல் வந்து தங்கிய உயிரானது மலர்ந்து வளர்தலுறும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/102&oldid=758148" இலிருந்து மீள்விக்கப்பட்டது