பக்கம்:உலகியல் நூறு.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 51 4. திரு நிலே பரந்த நினைவின் படிநிலைக்கு வாங்கிச் சுரந்த நினைவு சொரிந்து - கரந்தொளிர்ந்த உட்புலன்கள் தேர உடல் பொருந்த விருர்ந்து பெட்புகலன் துய்த்தல் பெரிது. 84. பொழிப்பு : எங்கும் பரந்து நிற்கும் நினைவு வெளியில் அலேயும் நினேவுகளே, படிந்த உணர்வு நிலைகளுக்குத் தக்கவாறு, உள்ளத்தால் வாங்கி, அவற்ருள் தானும் சுரக்கின்ற நினேவுகளே உலக நிலேகளுக்கேற்ப வெளிப்படுத்தி, மறைவாக விளங்கி நிற்கும் அக அறிவுநிலைகள் வளரும்படி தன் உடல் கூறுகளுக்கு ஒத்தவகையில் வீறுபெற எழுந்து நின்று, உயிரானது, இவ்வுலக வியற்கையின் இயல்பு நலன்களேப் பெரிதும் துய்க்கும். 5. புதுமை நிலை நுகர்ச்சி பழமை நுகர்வுபுதி தென்ப முகிழ்ச்சி தன்னுணர்வால் மொய்க்கும் - இகழ்ச்சி இவனில்லை ஏற்ற துயர்வென்றே எண்ணும் கவண்முகத் துடுருவுங் கல் 85 பொழிப்பு : உயிர்க்கு உற்ற நுகர்ச்சி நிலையறிவு பழை யதும், அதால் நுகர்கின்ற நுகர்வு நிலேகள் புதியனவும் ஆகும் என்றுரைப்பர். அவ்வாறு புதிய நிலைகளே நுகருங்கால், அவற்றின் முகிழ்க்கின்ற உணர்வு நிலைகள், தன்னின் பழைய உணர்வுகளின் அளவடிப்படையில் அவ்வுயிர்க்கு வந்து நிறையும். உயிரளவான் இகழத்தக்க நிலேகள் இவ்வுலகின் கண் ஒன்றும் இல்லையாகலான், தான் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு நிலையும் தன் நிலேயை உயர்த்துகின்ற நிலேயே என்று எண்ணி நுகரும். கவணின் முகத்தினின்று ஊடுருவிப் பாயும் கல்போல் அவ்வுயிர் ஒன்றின் தோய்ந்து அதனின்று நீங்கி ஒன்றை நோக்கிப் பாயும் பெற்றியதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/103&oldid=758149" இலிருந்து மீள்விக்கப்பட்டது