பக்கம்:உலகியல் நூறு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 53 2. உகப் பு நிலை உயிர்க்குகப்பு கூர்தல் உகப்புகிலேக் கங்காங் துயிர்க்குநிலைக் கொன்றினிணைந் தாரும்-செயிர்க்குநிலை தோன்றின் துமிக்கும் தொகைக்கூடும் துய்ப்புகினந் தான்றலையும் மேலொன்றுக் காங்கு ! 87 பொழிப்பு : உயிர் தனக்குகந்த பொருட்கூறுடன் பொருந் தித் துய்த்து உயர்கின்ற நிலேயே அதன் வளர்ச்சி நிலேயாம். அத்துய்ப்பு நிலேக்கு அவாவுற்றுத் தன்போலும் அவாநிலை கொண்ட பொருட் கூற்றுடன் கூடிய இன்னேர் உயிர்க் கூற்றுடன் இணேந்து பொருந்தித் தான் மேலோங்கு தற்குத் துய்க்கும். அவ்விணைப்பு நிலேயின் தனக்குப் பொருந்தாத குறை தோன்றுமாயின் தானுற்ற உயி ரி னே ப் ைப த் துண்டித்துக் கொள்ளும். அவ்வாறு ஒருயிர்க் கூறு தொகை மிகுந்த உயிர்க்கூறுகளொடு பொருந்தித் துய்க்கும். அவ் வகையில் ஓர் உயிர்க்கூறு தன்னினும் துய்ப்பின் மிகுந்த பிறிதோர் உயிர்க்கூற்றெடு பொருந்து தற்கே எண்ணி என்றும் அவாவி அலேந்து நிற்கும். 5. துய்ப்பு திலே ஒத்தவொன்றி னுள்ளுயிர்த்தே ஓங்குமொன்ருல் தாம்வளர்ந்து மெத்தப் பொருந்துதுணை மேவவே - கித்தலும் கோடானு கோடிக் கொடிப்பிறக்குந் தாமும்பல் கோடானு கோடி குவைத்து ! 88 பொழிப்பு : பிறந்து துய்க்க அவாவுதலேயுடைய உயிர் கள், தம் உணர்வு நிலைகளுக்கு ஒருவாறு பொருந்துவனவும், பொருட்கூற்றுடன் முன்னரே பிறந்து இயங்குவனவுமாகிய வேறு உயிர்மெய்களின் வழிப் பிறவி யெடுத்து, தம்மினும் பல் வகையான் ஓங்கி நின்ற உயிர்மெய்க் கூறுகளின் புறப்பொடு வளர்தல் பெற்று; தம் நிலேக்கு மெத்தவும் பொருந்தி நிற்கும் உயிர்மெய்க் கூறுகளின் துனேயுடன் உலகின்கண் மேவி வளரும் வகையில் நித்தமும் கோடிக்கணக்கான கொடி வழி யான் பிறவியெடுப்பதுடன், தாமும் பலகோடிக் கணக்கான கொடிவழித் தொகுதிகளே உண்டாக்கும்: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/105&oldid=758151" இலிருந்து மீள்விக்கப்பட்டது