பக்கம்:உலகியல் நூறு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 உலகியல் நூறு 4. உய்வு நிலை உள்ளம் அறிவுணர்வால் உள்விளர்ந்தான் ருங்கடங்கி வெள்ளப் பிறப்பின் விலகி - கொள்ளலந்த பேருளத்தைப் பேரறிவைப் பேரின்பைப் பெற்ருர்ந்தே ஒருளத்தால் கட்டுண்டாங் கோயும் ! 89 பொழிப்பு : ஒர் உயிர் உடலொடு பொருந்தித் துய்க் கின்ற பொழுது, அதற்குற்ற அறிவுணர்வு வழி அதன் உள்ள உணர்வு மேலும் மேலும் தூய்மையும் மென்மையுமுற்று விளங்கிக் கிளர்ந்து நின்று அமைவுற்றுத் தெளிந்து, அள வில்லாத பிறவிநிலேகளினின்று விலகித் தான் இறுதியாகக் கொள்ள விரும்பி, முற்பிறவிகள் தோறும் அலேந்த பேருள்ள மும் பேரறிவும் பேரின்பமும் சான்ற மெய்ப் பொருளே அடையப் பெற்றுத் துய்த்து, அதனின் உள்ளத்தொடும் அறி வொடும் தன் உள்ள அறிவு நிலேகளே இணேத்துக் கொண்டு, அங்ங்னே ஓய்ந்து ஒடுங்கும். 5. நிலைப்பு நிலை ஒன்றுகிலைக் கொன்றியுயிர் ஓய்ந்தநிலைக் கொண்பொருளால் என்றும் பிறத்தல் இலையாகும் - அன்றதுபோல் முற்பிரிந்த வல்லுயிர்கள் முள்வரைக்குத் தான்ருமாய்ப் பிற்பிரிதல் ஊழிக்குப் பின் ! 90 பொழிப்பு : ஒர் உயிர்க்கூறு தான் போய் இறுதியாகப் பொருந்தித் துய்க்க வேண்டிய மெய்ப்பொருள் நிலேயோடு பொருந்தி ஒய்ந்த நிலேயில், ஒள்ளிய பொருள் கூற்ருேடு இணைந்து மீண்டும் உடலெடுத்துத் துய்ப்புக்காகப் பிறத்தல் அவ்வூழிக்கண் என்றும் இல்லேயாகும். இனி, அதுபோலும் முன்னர் அம்மூல மெய்ப்பொருளினின்று பிரிந்த வலிய உயிர்க்கூறுகள் அனேத்தும் தன்போல் தம் இறுதி நிஇலக்கு வந்து கூடுகின்ற வரையில், தான் என்னும் தனிக்கூறு தாமென்னும் ஒரு பெருங்கூருய் ஆகி அவ்வூழியின் எல்லேக் காலம் வரை நின்று, அடுத்த தோற்றக் காலத்துப் பண்டு போல் மீண்டும் பிரிந்து தொடரும் என்க. ஊழி - உயிர்க்கூறுகள் உகுக்கப் பெற்று மீண்டும் வந்து பொருந்துகின்ற வரையில் உள்ள காலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/106&oldid=758152" இலிருந்து மீள்விக்கப்பட்டது