பக்கம்:உலகியல் நூறு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மெய்யறிவு நிலே அறிவு பகுத்தறிவு மெய்யறிவென் ருன்றே செறிவின் இயங்கிச் சிறக்கும் . முறிவுறுதல் என்றென்றும் இல்லை இறையே விரிவென்ப ஒன்றென்ரு ஆரும் உயிர். 9i பொழிப்பு : பற்றுதலறிவும், பற்றியவற்றைப் பகுத் துணரும் அறிவும் பகுத்துணர்ந்தவற்றின் என்று முளதாக் தன்மை பற்றிய மெய்யறிவும் எனப் படிப்படியாய் அமைந்து, ஒன்று செறிய மற்றது இயங்கிச் சிறப்புறும் என்க. இத் தொடர்ச்சியில் இடை முறிவுறுதல் எந்தப் பிறவியினும் இல்லை. (எனவே பிறவிதொறும் அறிவு தொடரும் என்க.) இறைமை யறிந்து பேரறிவின் பொருந்துதலே அத்தொடரின் விரிவு என்று சொல்வர். இப்படி நிலையறிவுணர்வை யெல்லாம் உயிர்க்கூறு ஒவ்வொன்ருகத் துய்த்து உணர்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/107&oldid=758153" இலிருந்து மீள்விக்கப்பட்டது