பக்கம்:உலகியல் நூறு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 உலகியல் நூறு 2. மன நிலை மனமொன்று மாட்சிபல மாந்தலுயிர் ஒக்கம் இனமொன்றல் ஆங்காங் கியல்பாம் - புனமொன்றிற் புள்ளார்தல் ஒக்கும் புலம்பார்தல் அப்புலம்பின் உள்ளார்தல் ஆன்ற ஒளி ! 92 பொழிப்பு : மனவெளி ஒன்றுதான். அவ்வெளிக்கண் ஆங்காங்குப் பொருந்தி யியங்கும் உயிர்க்கூறுகளின் தகுதி நிலைகளுக் கேற்ப, அவ்வவ்விடத்து விளங்கித் தோன்றும் தன்மைகள் பலவாகும். அம் மனவெளிக்கண் தங்கிய உணர்வு களேக் கண்டு நுகரப்பெறுதல் அவ்வவ் வுயிர்க் கூறுகளின் உயர்வு சிறப்புகளைப் பொறுத்தது. அவ்வகையில் உயிர்கள் ஒரோவழித் தம்மொடு ஒத்து விளங்குகின்ற உயிர்களொடு பொருந்துதல் அவ்வவ் விடத்துக்கண் இயல்பாகும் தினேப் புனத்தின்கண் விளைந்து நின்ற கதிர்களே ஆர்கின்ற பறவைக் கூட்டத்தினை ஒக்கதாம். உயிர்கள் மனப்புனத்தின் மலிந்து நின்ற நினைவுகளேக் கூர்கின்ற தன்மை அவ் வுயிர்களின் உள் நின்று இயக்குகின்ற பேராற்றலாக விளங்குவது என்றும் ஆர்ந்து நின்ற பேரொளியாகிய இறைமை யாகும். 3. இயக்க நிலே பொருளனத்தும் ஒன்ருகும் ஆற்றலெலாம் ஒன்ரும். உருளிரண்டும் ஒன்றினே டொன்ரும் - மருள்நிலைகள் ஆன்ற வியக்கென்ய ஆதல் பொருளாமுள் ஊன்றல் இறையென் றுணர். 93 பொழிப்பு : வேறு வேருகப் பிரிந்தியங்கிலுைம் பொருட் கூறுகள் அனைத்தும் ஒன்றே ! அஃதேபோல் வேறுவேருகப் பிரிந்தியங்கிலுைம் ஆற்றலெனும் உயிர்க்கூறுகள் அனைத்தும் ஒன்றே ! அவ்வாறு பொருளாகவும் ஆற்றலாகவும் இயங்கு கின்ற இரு தன்மை யுடையனவே அதன் பல்வேறு கலந் தியக்கும் மயக்க நிலைகளே அவற்றின் இயக்கமாகும். உருவம் பெற்றுப் புறத்துப் புலகிை நிற்பது பொருளாகும். அதனை அளாவி நின்று உள் ஊன்றி இயக்குகின்ற உயிர்க்கூற்றையே இறைப் பொருள் என்று உணர்ந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/108&oldid=758154" இலிருந்து மீள்விக்கப்பட்டது