பக்கம்:உலகியல் நூறு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் . 57 4. கூர்தல் நிலை தானே புலம்பனும் தாமாகி ஒன்றலிறை கூனே தலைப்பிரிவு கொள்விரிவே நீள்புடவி ஊனே தனையறியும் ஒண்னுகர்ச்சி உட்கூருந் தானே தலையொன்றித் தாம். 94 பொழிப்பு : தான் என்னும் ஒருமையுணர்வே உயிர்க் கூருகப் பிரிந்து இயங்கும் தன்மையை உருவாக்கும். அவ் வாறு பிரிந்தியங்கும் உயிர்க்கூறுகள் பல்வேறு துய்ப்பின் முடிவில் தம்மை முற்றும் உணர்ந்து கொண்டு தாம் என்னும் நிலேயில் ஒன்றினேந்து நிற்கின்ற நிலேயே இறைநிலேயாகும். ஒன்றியங்கும் இறைக்கூறினின்று இணேமுறிவுக் கடிக்கள ளுகிய உட்கோட்டத்தாலேயே முதற்கண் உயிர்கள் பிரிந் தியங்கலாகிய தன்மை நேரும். அவ்வாறு உயிர்க்கூறுகள் பிரிதலற்றுத் தாம் இயங்குகின்ற நிலையின் விரிவே நீண்டு விளங்கும் புடவி என்க. அவை பொருட்கூற்றுடன் சேர்ந்து தம்மைத் தனிப் படுத்திக் கொண்டு ஊனும் என்பும் குருதியு மாய் இயங்கி, அறிவு விளக்கமுறும்படி நுகர்ச்சி பெற்று, உள்ளுணர்வால் கூர்ந்து விளங்கி நின்று, பிரிதலுற்ற ஒன்றுடன் ஒன்று பொருந்தி இறுதி நிலையில் தாம் ஆகி நிற்கும். 5. உறவுறழ்ச்சி நிலை எவ்விடத்தும் எப்பொழுதும் எதுவும் தவறின்றே : அவ்விடத்திற் கொல்வா அலவதுவே . ஒள்விடத்தும் ஒவ்வொன்றும் கொண்ட உறவும் உறழ்ச்சியுமே - அவ்வொன்றுக் கான அறிவு ! - 95 பொழிப்பு : புடவிக்கண் எந்த உலகத்தும் எக்காலத்தும் நிகழ்கின்ற நிகழ்ச்சிகளில் எதுவும் முறைமையாக இயங்கு தலன்றித் தன் நிலேயின் மாறித் தவருக இயங்குதல் இல்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/109&oldid=758155" இலிருந்து மீள்விக்கப்பட்டது