பக்கம்:உலகியல் நூறு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix அவ்வகையில், அறவிலக்கிய நூல்களே மட்டும் நம் பார்வைக்கு எடுத்துக் கொள்ளுவோமானுல், தமிழ் தோன்றிய காலந்தொட்டு, ஈராயிரம் ஆண்டு முன் வரைக்கும் எந் நூலும் நம் கைக்குக் கிடைக்காது போயினது. அன்று தோன்றிய திருக்குறள் என்னும் செப்ப அறவிலக்கியமே கிடைத்துள்ளது ! பிந்திச் சுழன்று கடந்த, ஈராயிரம் ஆண்டுக் கால அளவிடையில் தோன்றிய மூன்று நான்கு அறவிலக்கியப் படைப்புகளும், அரைகுறை யுடை உடுத்தியனவாகவே யுள்ளன ! - - அன்று தொட்டு அண்மைவரை, திருக்குறளே அடுத்த படியில் வைத்து எண்ணிப் பார்ப்பதற்குரிய அளவுக்கு, வேருெரு புதிய செப்ப அறநூலேப் படைக்கும் உரத்திற வன் புலமையும், உலகியலறிவும் மக்கள் நல வுணர்வும், மெய்ப் பொருள் தெளிவும் கொண்ட செம்புலவாணர் தோன்றிலர் ! ஏன் ? w இந்த ஈராயிரமாண்டு இடைவெளி முழுமையிலும், அய லகத்தின் ஊடுருவிகள் தமிழகத்தின் மதக்குடுமியை இறுகச் சுற்றிப் பற்றியவாறும் அசைத்திழுத்தவாறும் காவெக்காள மிட்டுக் கயமையாடி வந்தனர் 1 அக் கால எல்லே முழுமை யிலும் உட்பகைகளுக்கு உர்மிடப் பெற்றன ! ஆண்ட மன்னர் களின் அறிவு நன்கு குட்டை குழப்பப் பெற்று, அந்நில தொடரக் காப்பும் இடப்பெற்றது ! (ஆடுகோட்பாட்டுச் சேரலாதனே , பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலேயே "' (63 - 1 - பதிற்றுப் பத்து) என காக்கைப் பாடினியார் நச்செள்ளேயார் பாடிய ஒரு வரியே, நம் மன்னர்களின் அடிமை நிலைமையையும், புலவர் பெருமக்களின் தன்மான மற்ற தன்மையையும் காட்டப் போதுவதாகும் ! ; அக்கால், புறப்பகைகள் புகழுலா வந்தன எங்கும் அறிவு மழுக்கமும் பண்பு வழுக்கமும் கொழுத்தன குடிமை கலந்து உரிமை, உள்வள மறக் குலத்தினர், தம் பண்டை நிலம் மறந்தனர். திண்டுகளில் குத்தி, பிறனையும் கூட்டிச் சூது வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/11&oldid=758156" இலிருந்து மீள்விக்கப்பட்டது