பக்கம்:உலகியல் நூறு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இறைமையியல் §: 1. ஒருமை நிலை ஒன்றினுள் ஒன்ரு ஒடுங்கி உலகொடுங்கி அன்றிரண் டென்னும் அனையாகி - ஒன்ருவே என்றுமிருந் தெல்லாமாய் ஏர்ந்து விரிந்ததுவே இன்றும் இயங்கும் இறை : 96 பொழிப்பு: ஆற்றலென்னும் அறிவுக் கூருயும், விளங்கித் தோன்றும் பொருட்கூறயும் பிரிந்தியங்கும் பல்வேறு இயக்க நிலக்கூறுகளும், ஒன்றினுள் ஒன்ருகும்படி ஒடுங்கிப் போய், அதன்வழி உலக விரிவும் ஒடுங்குத லடைந்து, ஆற்றல் பொருள் என்னும் இரண்டு நிலைகளும் அல்லாத ஒரே நிலை என்னும் தன்மையாகி, ஒன்ருகவே ஊழித் தொடக்கம் வரை பொருந்தி யிருந்து, பின் ஊழிக்காலத் தொடக்கத்தே இரண்டாயும் அவைவழி எல்லாமுமாயும் எழுந்து விரிந்து நிற்பதே, தொடக்கத்தும் முடிவினும் ஒன்றி நிற்கின்ற இறைமை என்பது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/111&oldid=758158" இலிருந்து மீள்விக்கப்பட்டது