பக்கம்:உலகியல் நூறு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 உலகியல் நூறு 2. இருமை நிலை தான்பாதி கின்று தனிப்பாதி தான்விசும்பி மீன்கதிராய்ப் பூதி மிளிர்ந்து - ஊனுடம்பாய் உள்ளமாய்த் தான்றனையே ஊடுருவி கின்றின்ப வெள்ளமாய் கின்ற விரகு. 97 பொழிப்பு : ஒன்ருகி நின்ற இறைமைக் கூறு முழுவது மாய் விரிந்து விளங்காமல், தான் ஒரு பாதியாக என்றும் நின்று, தான் ஊடுருவி நின்ற மறுபாதியினின்று விசும்பி எழுந்து, பல்கோடி விண் மீன்களாகவும், கதிர்களாகவும் புடைந்து மிளிரத் துலங்கி, அவற்றினின்றும், பல்வேறு உயிர்க் கூறு பொருட்கூறுகளாகப் பிரிதலுற்று ஊனுடம்பு பெற்ற பருவியக்கக் கூறுகளாகவும், அவற்றின் அகத்தே இறை வெளியாகவும், அகப்புறத்தே உள்ள வெளியாகவும், புறத்தே அறிவு வெளியாகவும், புறப்புறத்தே பூத வெளியாகவும் விரிந்து, எல்லா நிலையினும் தானே ஊடுருவி நின்று, இன்ப நிலே துய்ப்பின் பெருக்கமாக என்றென்றும் பேரறிவும் பேராற்றலுமாய் நிற்கின்றது. 3. உண்டிலே நிலை இறுத்தல் இறைமை இறுதிநிலை யாவும் அறுத்துணர்வார் என்றும் அறிவார் - மறுத்தல் பொருட்புலர்வு மற்ற தகப்புலர்வு போகா மருட்பொருதல் ஆக்க மலிவு. 98 பொழிப்பு : என்றும் தங்கியிருத்தலே இறைமை என்பது. அதுவே அனைத்து நிலைகளுக்கும் இறுதியான மெய் நிலை யாகும். வெளிப்பட விரிந்து நின்ற உயிர்க் கூறுகளையும் பொருட்கூறுகளேயும் உள்ளுள்ளாகப் பிரித்து உணரத்தக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/112&oldid=758159" இலிருந்து மீள்விக்கப்பட்டது