பக்கம்:உலகியல் நூறு.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர் 6 : நுண்ணறிவுடையோர் அனைத்துக்கும் முடிவாகிய இறை யுளதாம் இத்தன்மையை அறிந்து உண்மை உணர்வர். அவ்விறைத் தன்மையை மறுத்துரைக்கும் தன்மை பொருட் கூறுகள் புலர்ந்து விரிகின்ற நிலைக்கு அடிப்படையானது. மற்று, அவ்விறைத் தன்மையை ஒத்துரைக்கும் தன்மை ஆற்றற்கூறுகள் மலர்ந்து கூர்கின்ற நிலக்கு அடிப்படை யானது. முடிவு பெருத இவ்விறு அறிவுநிலைகளும் தம்முள் முரணி, பொருதிக் கொள்ளும் தன்மையே இவ்வுலகின் உருவாக்கநிலைகள் நிறைந்து தோன்றுவதற்குரிய அடிப்படை பTகும். 4. தெளிவு நிலே மன்பொருள் யாவும் மனம்வாங்கும் ஒண்மனத்தை முன்பொருளும் வாங்க முடியுமோ? - தென்படுயல் புத்தாக்கம் எல்லாம் புலத்துணர்வே ஆங்கதனின் வித்தாகும் மெய்ம்மை விறல். 99 பொழிப்பு: வெளிப்பட்டு நிற்கின்ற பொருள்களின் அனைத் தின் அகப்புறத் தன்மைகளும் மன வாற்றலின்கண் வந்து படிவனவாகும். ஆல்ை, ஒளிர்ந்து விளங்கும் மனவாற்றலின் தன்மையை, நம் முன்னர் பருமையாய்ப் படிந்து நிற்கின்ற உள்ளுணர்வு சாராத உருப்பொருள்கள் உள்வாங்குதல் ஒல்லுமோ ? ஒல்லாதென்க. புறத்தே பருப்பொருளாய்க் காணப்படுகின்ற, புதுவாய அனேத்து உருவாக்கங்களும், அருவாயமைந்த உணர்வினின்றும் அகத்தால் வாங்கி உருப் படுத்திய உணர்வின் புலப்பாடுகளே ! அவை எல்லாவற்றின் மூலப் பொருளாகி நிற்கின்ற ஒன்றே இறைமை யென்னும் சிறப்பினதாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/113&oldid=758160" இலிருந்து மீள்விக்கப்பட்டது