பக்கம்:உலகியல் நூறு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 உலகியல் நூறு 5. ஒப்பு நிலை ஒவத் துணுக்கால் உருவறியார் ஒவ்வொன்ரு மேவத்துடிக்கும் மிகை உருவம் - கூவங்னைக் தார்க்கே இசைமுடிவாங் கார்ந்திசைப்பார்க் கென்முடிவு நீர்க்குண்டோ உண்மை நிறம் ! of 00 பொழிப்பு : பெரியதோர் ஓவியப் படத்தைப் பல்லாயிரங் கோடிக் கூறுகளாக்கிய நிலேயில், அவற்றின் ஒவ்வொரு கூற்றையும் கொண்டு, முழுவுருவையும் முன்பு கண்டறியாத வர்கள், தாம்தாம் பெற்ற அறிவுணர்வுக்கும் உளவுணர்வுக்கும் மெய்ப்பொருளுணர்வுக்கும் ஏற்றவாறு, தாமே ஒருருவத்தைக் கற்பித்துக் கொண்டு, அவ் வுருவநிலைக்குத் தமக்குக் கிடைத்த ஒரு துணுக்கின் கூற்று வடிவத்தைப் பொருத்துகின்ற மிக விரிந்த கற்பிதங்களே இக்கால் உள்ள இறை உருவங்களும் அவற்றின் புறச்சாயைகளான சமையங்களும். ஒலிப்புலனுல் ஏதாமோர் ஒலியை உண்டாக்க நினைத்தவர்களுக்கே இறுதி முடிவாக இசைநிலை கைவரப் பெறும். ஆல்ை இசைநிலே கிடைக்கப் பெற்ற ஒருவர்க்கு இறுதி முடிவாக, இவ்வுலகின் கண் இயங்கும் வரை, அவ்விசையே முடிவல்லது வேறு முடிவு ஏது? நீர்க்குத் தான் இயல்கின்ற இடத்தானும் காலத்தானும் பொருட்புணர்வாலும் கொள்ளுகின்ற நிறமேயல்லாது, இயல் பின் ஒரு நிறமில்லையாதல் போல, இறைமை, தன்னை வெளிப் படுத்தி நிற்கும் உயிர்க்கூற்ருனும் பொருட்கூற்ருனும், வடிவ மெய்துமேயன்றி, தனக்கென்று ஒரு வடிவத்தைப் புலப்படுத் தாதாம் என்க. (நீர்க்கே நிறமில்லாயின் அதனின் பலநிலை கடந்த ஒன்றிற்கு உருவம் சமைக்க எங்கன் ஒல்லுமென்க.) முறும

  • of
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/114&oldid=758161" இலிருந்து மீள்விக்கப்பட்டது