பக்கம்:உலகியல் நூறு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奚 கொண்டு தொன்மம் (புராணம்) படிப்பதையே, அறிவும் தொண்டும் அறனும் பயனுமென மலிந்த தமிழ உள்ளங்கள் உலேந்தன மானமும் நாணமும் எங்கும் நலிந்தன ! இந்த நிலைப்போங்கு தொடர்ந்த ஈராயிரமாண்டுக் காலத் தொய்வு பெரியார் ' என்னும் பொதுத் தொண்டுத் தலே மகனாால் முற்றுப்புள்ளி பெற்றது! அதுவரை, இங்கு இலக்கிய முகைகளும் எழவில்லே கலக்கிய பகைகளும் விழவில்லே ! இந்த நூற்றண்டிலேயே, நமக்குத் தன்னுரிமை ஊற்றுக்கண் திறந்தது ! தன்மான எழுச்சியும், பண்டைய பண்புவளம் நோக்கிய விழிப்பும் வித்து விளர்ந்தன ! பெரியார் அவர்களின் பொதுத் தொண்டு விளேத்த பயனய், தமிழரிற் பல்லோர் கடந்த பழைமையில் புழுங்கிய பாரிய நலத்தை, மீள உணர்ந்து தலே நிமிரத் தொடங்கினர் ! பல துறைகளிலும் தம்முணர்வையும், உழைப்பையும், செலுத்தி வளர்ச்சி நோக்கினர். அவற்றிலொரு துறையாம் இலக்கியத்தின் கண்ணும் கனத்த உரவளர்ச்சி ஒரு புறத்தே நிகழ்ந்து வருகின்றது ! தனித்தமிழ் என்னும் பெயரிய துரிய தமிழை முன்னிறுத்தி ஒரியக்கம் தோன்றி வளர்ந்து வருகின்ற ஒரு நிலேயே, தமிழினம் தன்னே உணரத் தலேப்பட்டுவிட்டது என்பதற்குப் போதிய சான்ருகும். மறைமலேயடிகள், பாவாணர், பாவேந்தர் போன்றேரின் ஆக்க வெளிப்பாடுகள், தமிழ் தன்னை மீட்டுக் கொண்டு மீள உயருதற்கான ஆற்றல் தகவு அழிவுருதேயே அமைந்திலங்குவதை விளங்க விளக்கின : தூய தமிழை வெறுப்பவன், கட்டாயமாகத் தமிழ்ப் பகை வகைவே இருப்பான்; அன்றெனில் அறியாமைச் சூழ்வால் தமிழ்ப் பேதையாக இருப்பான் என்ற தெளிவு தமிழின உணர்வு நிரம்பியோர் அனைவர்க்கும் படிப்படியே ஏற்பட்டு: வருகின்றது ! எங்கும் தூய தமிழுணர்வு செழித்து வளர்ந்து கடைப்பிடி கொள்ளப் பெற்று வருகின்றது. இந்நிலைக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/12&oldid=758167" இலிருந்து மீள்விக்கப்பட்டது