பக்கம்:உலகியல் நூறு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Xi தேவையான கடும் பணியைத் தென்மொழி என்னும் தூய தமிழ்த் திங்களிதழ் இருபத்தியைந்தாண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருகின்றது. தமிழ்ச் சிருர் சிறுமியர்க் கெனத் தமிழ்ச்சிட்டு ' என்னும் பெயரில் தொடர்ந்து ஒரித ழும் இயங்கி வருகின்றது. இவற்றை இயக்கி வரும் பெருமகன் தூய்தமிழ்ச் செம்மல் பாவலரேறு. பெருஞ்சித்திரளுர் அவர்கள் ஆவார்கள். - - - இனம், மொழி, நாடு ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்த தம் கருத்துகளே உரையாலும் பாட்டாலும் இடைவிடாது தொடர்ந்து பரப்பி வரும் இவர், இன்றைக்குத் தமிழினக்கொடி தன்னே மீட்டுக் கொள்ளவும், பற்றியேறிப் படாவும் பயனுய் திற்கின்ற வலிந்த கொழுகொம்பு ஆவார் ! ஒட்டு மொத்தத் தமிழினத்தின் முன்னேற்றம் பற்றிய நெஞ்ச அவலத்தைச் சுமந்தவாறு துடிப்பொடு உழைக்கும் தூய்மையர் இவர் ! இப்பெருமகளுரின் ஆயிரக்கணக்கான உரைகளும் பாக்களும் கட்டுரைகளும் நூல்வடிவில் புறம் போந்திருப்பின், அவை நூற்றுக்கணக்கில் விரிந்து விளங்கி யிருக்கும் ! ஆனால், இது வரை அச்சில் படிந்து வெளியேறித் தனித்தவை, ஏறத்தாழ இருபது நூல்களே ! அவை யாவும் மாணிக்க நூல்கள், ! வயிரவொளி விரிபவை! தமிழிலக்கி உலகில் மறுமலர்ச்சியை விளைவித்ததோடு தமிழின நாட்டுணர்வுகளேயும் பதப்படுத் தும் சால்பு சான்றவை ! அவ்வகையில், உலகியல் நூறு என்ற தலைப்பில், புதிய ஒர் அறிவிலக்கியம் இப்பொழுது இவரிடமிருந்து வெளிப்போந்துள்ளது ! இயல்களும் நிலைகளும் உலகியலின் பாரிய பாப்பின இருபது இயல்களாகப் பாகுபடுத்தி, ஒவ்வோர் இயலேயும் ஐயைந்து நிலேகளாகக் கூறுபடுத்தி, மொத்தமாக நூறு வெண்பாக்களில் அவற்றைச் சிறக்க அடக்கித் திணித்து உலகியல் நூறு என்று தலைப் பிட்டுப் படைத்திருக்கின்றர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/13&oldid=758178" இலிருந்து மீள்விக்கப்பட்டது