பக்கம்:உலகியல் நூறு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii இருபது இயல் பிரிவுகளேயும், அவற்றின் உள்ளடக்கமான நூறு நிலைப் பிரிவுகளையும் நனியொழுங்காக நிரல்படுத்தி, இந்நூலே அமைத்திருக்கும் செப்பம், இலக்கியப் படைப்பாளி. கள் யாவரும் முதற்கண் படித்துணர்ந்து பதித்துக் கொள்ள வேண்டிய அருநிலையாகும். . - - - இயல் தலைப்புகளும் நிலத் தலைப்புகளும், - கச்சிதமும் சொற்சுருக்கமும் பொருள் விளக்கமும் உடைமை, இயற்கை யின் பேரொழுங்கைப் போன்றதாகும். உலகியலில் உள் ளடங்க வேண்டிய அத்துணைப் பகுதிகளையும் ஒன்றுவிடாது அமைத்திருக்கும் நிறைவுநிலை, நூலுக்குரிய முழுமைப் பண்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. வெண்ணுற்பா உயர்ந்த பா வகை ! வெண்பா யாப்பமைப்பு : மூன்றே முக்கால் அடிகள் முந்நூற்றெழுபத்தைந்து அடிவரம்பில் நூலே முழுக்கச் செறிக்கப்பட்டுள்ளது ! எதுகையும் மோனே யும் முறைமையில் அமைந்து ஒசைநலம் பொருந்தி யுயர்ந்து, இனிய எளிய கருத்துக்கேற்ற முழு ஆட்டந் திணிந்த சொற்களால் பெய்யப் பெற்று, வெண்பாக்கள் விளங்கி யொளிர்கின்றன! ஒ, விலக்கிய (ஓ - மதகுநீர் தாங்கு பலகை) நீரோட்ட விரைபாட்டு ஒழுக்கு ஒத்த பாவொழுங்கு ! சுருக்கத்தையும், அதன்கண்ணேயே விளக்கத்தையும் புரிகின்ற ஊட்டச் சொற்போங்கு ! பாவொன்றினுள் அடங்கும் கருத்துத் தினுக்கம், வெண்பா யாப்பினுள் யாக்கப் பெற்றிருப்பினும், நூற்பா ! என்னும்படியான உணர்வினையே ஊன்றித் துய்ப்போர்க்கு ஊட்டி விடுகின்றது. இந்நூலுள் மிளிரும் இப்பா அமைப்பை வெண்பா என்பதினும் வெண்னு ற்பா'(வெண்-நூல்+பா) எண்ணுமோர் பிரிதோர் சொல்லமைத்து வழங்குதல்கூடப் பொருத்தமுடைய தாகும். . У

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/14&oldid=758180" இலிருந்து மீள்விக்கப்பட்டது