பக்கம்:உலகியல் நூறு.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii கருத்துக் கிசைந்த பா நடை இந்நூலாசிரியர் தம் பாநூல்கள் யாவற்றுக்கும் தாம் எடுத்து விளக்கப் போந்த கருத்துகட் கேற்ப பாநடையைத் தேர்ந்தெடுத்து யாக்கும் பண்பினர் மகபுகு வஞ்சி யை வஞ்சிப்பாவிலும், வாழ்வியல் முப்பதை இரு தூக்காக வந்த அறுசீர் ஆசிரிய மண்டிலப்பாவிலும், எண்சுவை என்பதைச் சிந்தியல் வெண்பாவிலும், நூருசிரியத்தை ஆசிரியப்பாவி லும், கற்பனேயூற்றை (புதுப்பா) உரைப்பாவிலும் யாத்தமைத் தளித்த பாங்கு, இப்பண்புடைமையாலேயேயாம் ! இந்த உலகியல் நூறு என்னும் நூலே வெண்பாவால் மட்டுமே ஆக்கி யுள்ளது இவரின் ஆக்கங்களில் புதிய போக்குடைய தாகும். நடைத் தூய்மை ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்டுத் தோன்றிய, முதல் அறவிலக்கண விலக்கியமாகிய திருக்குறளில்கூட தொண்டு (ஒன்பது) வடசொற்கள் திமிர்ந்து நுழைபட்டுள்ளன என்பது சொல்லாய்வு முயல்வில் வெளிப்பட நிற்கிறது . ஆல்ை, இக் கால் தோன்றியுள்ள உலகியல் நூறு ' என்னும் இவ்வற விலக்கியத்துள் ஒரு பிறமொழிச் சொல்தானும் விரவவே யில்ஜல இஃது, ஒரு தனித்த சிறப்பாகும் பிறமொழிச் சொல் விரவா நிலையில், குறளினும் மேலோங்கி யிருக்கும் தன்மையை இது பெற்று நிற்கின்றது ! - தொடக்க வாய்ச்சொல் உலகம் என்னும் சொற்பொருள் முன்வருமாறு நூல் நுனியைத் தொடங்குதலே, தமிழ்ப் பாவியல் அறிஞர் களிடையே மங்கலமாகக் கருதப் பெற்றுக் கடைப்பிடி கொண் டது என்பது, இதுவரை வந்த பாவிலக்கியங்கள் பலவற்றல் புலனுகின்ற ஒரு கருத்து (ஆதி பகவன் முதற்றே உலகு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/15&oldid=758181" இலிருந்து மீள்விக்கப்பட்டது