பக்கம்:உலகியல் நூறு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV இனவொருமை

  • தமிழினம், தமிழினம் ' என ஒயாது தொடர்ந்து குர லிட்டவாறு இன மீட்புக் கொள்கையையும் பரப்பி வருகின்ற ஒர் இனக்காப்பு உள்ளம், - தம் அறவிலக்கிய நூலுள் மாந்த வியல் கூறுமிடத்தே, மனவொருமையுடன் இரண்டு தனித் தனி இனங்கள் தம்முள் ஒன்ரு தற்கு ஏது அமையுமானல், அவ்வினங்கட்குள் ஏற்படும் கலப்புநிலை ஏற்புடையதே என்னும் பொருள்பட மனக்கலப்பு வாய்க்கில், இரு மாண் குடிக்குள் நேரும் இனக்கலப்பு, - குற்றமன்ரும் ! " (பா : 1.3 : 1-2) என்று கருத்தளிக்கின்ற நிலையால், தம்மின் மாந்தப் பொதுமை நோக்கிய பரந்த பேருணர்வைப் புலப் படுத்தி திற்கின்றது ! உலகவொருமைக்கு வித்திடும் அரிய வைர வரியுமாகுமீது !

அறிவியற் படிவு அறிவியலுண்மைகளே ப் பரவலாகச் சுட்டிக் கோடிட்ட வாறும் மெய்ப் பொருளியல் சாரப் படிவுள்ளவாறும் உலகிய லறிவுக் கருத்துகளே முற்படுத்தியவாறும் அறவிலக்கிய நூலொன்றை, முதன்முதலில் யாத்தளித்த பெருமையை, இந் நூலாசிரியப் பெருமகன் தமக்கே உரித்தாக்கிக் கொள்கின் ருர். அறவிலக்கிய மொன்றில் இவ்வளவு செறிவாக அறிவியற் கூற்றுப் பகுதிகள் அடங்கியமைக்கு, அறிவியல் விளக்கம் புடைசூழ்ந் தொளிரும் இக்காலச் சூழலும் ஒரு காரணமாகும். கடவிடைகள் நேர்ச்சிக் கணிப்பு (1 : 4 இயல்நிலை) கடவுதல் என்பது ஒன்றைக் கடத்துவதற்கு விரைவச் செலுத்துதல் என்னும் பொருளில் முதற்கண் பயிலப்பெற்ற அரிய சொல் பின், கடவுதல் என்பது கேள்வியைச் செலுத்துதலுக்கும் ஆகி வளர்ந்தது! கடவுவிடை > கட விடை எனப் புணர்ந்து நின்றது ! கடவிடை என்பது விை விடை என்பதன் பிறிதொரு புடை, பொருள் வடிவம். * . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/17&oldid=758183" இலிருந்து மீள்விக்கப்பட்டது