பக்கம்:உலகியல் நூறு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi வினுக்களும் அவற்றிற்கு இம் மாந்தர் இறுத்துக் கொள்ளு கின்ற விடைகளும், இவர்கள் இவ்வுலகக் காட்சிகளின் மற்றும் நிகழ்ச்சிகளின் வழியதான அறிவில், தாம் விளங்கிக் கொண்ட அனவினே மட்டுமே வைத்துக் கொண்டு, கணித்துச் சொல்லிக் கொள்ளும் எல்லேயன என்னும் பேருண்மையினே விளக்கப் புகும் நூலாசிரியர்,-அக்கூற்றமைந்த தம் பாடற்கண்னேயே, இவ்வுலகை உள்ளடக்கி புடவியில் இஞ்ஞாலம் ஒரு கடற் புன்மணல் அளவினதாக உள்ளது என்று ஒப்புமை கூறுதி லும், அண்டத்தில் ஒளிரும் மின் பிழம்புகளையும் இம்மக்கள் நீருயிராகிய நிலமீனேக் குறித்த சொல்லாலேயே குறிக்கின்ற னர் என்ற உண்மை சுட்டுவது போன்று மீன் ' என்ற சொல்கில விண்மீனைக் குறிக்கப் பயன்படுத்தலும், அவ்விண் மீன்களின் செறிவைக் கூறுமிடத்துக் காடுபோன்று அவை செறிந்துள்ளன என்னும் பொருளில் அடவியென மீன்செறி வாம் எனப் பாவரியில் கூறி இவ்வுலகத்துள் அடங்கிய 'காட்டையே பொருத்திக் காட்டி ஒப்புமை சுட்டுதலும் உட் புலனுலுணர்ந்து உவப்படைதற் குரியவாகும். அறிவு மருட்சிகில (பா. 3) உருண்டை என்பது உருள்வதற்கு ஏதுவாய வடிவாகும். உருள் என்னும் வினையடிச் சொல்லினின்றே உருண்டை என்னும் வடிவு பிறந்திருத்தலேயும் நாம் இங்கு ஒப்பக் கருது தல் நலம். (அம் மூலச் சொல்லினின்றே Roll (English), Ruila (Swedish). Roaler (Old French) Whirl (English), Rota (Latin) போலும் மேலயாரிய மொழிச் சொற்கள் பிறந்தமையையும் இங்குக் கருதி மகிழலாம் !) - . நாம் உலவும் இவ்வுலகம் உருளும் ஓர் உருண்டை ! கண்ணும் ஓர் உருள் உருண்டை உருண்டையான கண், உருண்டையான உலகைப் பார்க்கும்பொழுது இவ்வுலகம் தட்டையான வடிவினதாகவே அதற்குத் தெரிவதாகின்றது.!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/18&oldid=758184" இலிருந்து மீள்விக்கப்பட்டது