பக்கம்:உலகியல் நூறு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii ஏனெனில், உருண்டைக் கண் இவ்வுலகில் இருந்தவாறே தம் பார்வையைச் செலுத்துதலான், முழுமைத் தோற்ற உண்மையை விளங்கிக் கொள்ளாது நிற்கின்றது! அஃதாவது பார்க்கும் பொருள் பார்க்கப்படுகின்ற பொருளின் ஒரு புறத் திலே மட்டும் நின்று பொருந்தி அதைப் பார்க்கும் பொழுது, அக் காண்புறு பொருளின் முழுமையை விளங்காதேயே வேருெரு முடிபைத் தான் பெறுகின்றது . இவ்வுலகு தட்டை யானது என்றே, கண் காட்சி பெறுகின்றது ! அதேபோல், இக் காண்புறு பொருளின்கண் ஒளியைக் காணும்போதும் இருளேக் காணும்போதும் இரவும் பகலுமாக இதில் மாறி மாறி ஏற்படுகின்றதென்ன, அவற்றைக் காண் புறு பொருளின் தன்மையதாகவே தப்பாகக் கணிக்கின்றது ! இருளும் ஒளியும்,-அந்நிலத்தின் தன்றன்மையே அல்ல என்பதுவும், அவை கதிரவக் கோளின் வெய்யொளிப் படிவுப் பகுதியும் படாப் பகுதியுமாகிய இருவேறு பகுதிகளாக நிலச் சுழற்சியின் பாங்கோடேயே பொருந்தித் தொடர்கின்ற அமைவுகளின் ஒருபுடைக் காட்சியென்பதுவும் கட்புலனுக்கு நேரடியாகத் தோன்றுவதில்லை! ஏனெனில், அக் கட்புலக் காட்சியை ஆய்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுபுலத் தெளிவு அது மருண்ட அறிவினர், உலகம் தட்டையாயே இருப்பது போன்றும், இருண்டும் ஒளிர்வதுமாகிய தன்மைகளே அது பெற்றிருப்பதைப் போன்றும்தாம் தம் காட்சியளவையை மட்டும் வைத்துக் கொண்டே முடிபு கொள்வர் ! அதைப் போன்றேதாம் இவ்வுலகின் உண்மை நிலைகளையும் உண்மை யன்மை நிலைகளையும் ஆழ்ந்த அறிவ்ொடு எடையிட்டுப் பாராதேயே துடுமெனத் தர்ம்க்கண்ட காட்சியே மெய்யென மருண்ட அறிவால் கருதிக்கொண்டுவிடுகின்றனர். - - *கண்டதே காட்சி,கொண்டதே கோலம்', 'கண்ணுல் காண்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய்த் தீர உசாவியறிதலே மெய்' என்பன போலும் பரவலாக வழங்கும் நாட்டுப் புறப் பழமொழிகள்-இந்த மெய்க் கருத்தை ஒரு புடை யொத்த பொது மொழிகளாகும் ! * . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/19&oldid=758185" இலிருந்து மீள்விக்கப்பட்டது