பக்கம்:உலகியல் நூறு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii எந்த இடத்திலிருந்து கொண்டு அப்பொருளேக் காண் கின்றது என்பதைப் பொறுத்தே, அப் பொருளின் காட்சி கண்ணுக்குப் புலனுகின்றது ! அப்போதுங்கூட அதன் முழுமையைக் காணவியலாது அதன் முழுமையைக் காண, அறிவானது அக்கண் தான் முன்கண்ட, அதாவது இப்போது கண்ணுக்குப் புலப்படாப் பகுதியாகிய மறைவுப் புறப் பகுதியை, அப்பொருளொடு இணேத்துத் தருகின்ற உளக் காட்சி இயைப்பினே நிகழ்த்துதல் வேண்டும். அஃதுடனேயே ஒரளவு முழுமையான பொருட்காட்சியை உணர முடிவ தாகும். எப்பொருளின் முழுமையான காட்சியையும் உணர வியலுமே ஒழிய, நம்மால் காணவே இயலாதாகும் ! ஏனெ னில், அந்த அமைப்பிலேயே நம்மின் கண்ணே உள்ளது ! ஆக, காட்சியளவொன்றினலேயே எந்தப் பொருளின் முழுத் தோற்றத்தையும் கண்டு கொள்ளக்கூடிய திறனே நமக்கில் லாத போது, உண்மை அல்லது உண்மையன்மையாகிய இவற்றை அதன் மெய்ந்நிலைப்பட் அறிவதும் உணர்வதும் மிகப் பெரும்பாடாகும். இந்நிலையை யுணராததாலேயே மக்களுட் பெரும்பாலோரும் தாறுமாருகத் தாம் கண்ட கட்புலக் காட்சியளவைகளின் துணே மட்டுமே கொண்டவாறு, உள்ளதென்றும் இல்லதென்றும், அண்மைத் தென்றும், சேய்மைத் தென்றும் மயக்குற்ற நிலையிலேயே கூறி நிற்கின் றனர். இக் கருத்தையே, ' உருண்டை உலகம் உருள்விழிக்குத் தட்டாய் - இருண்டொளிரும் தன்மைத் தியல்பின்-மருண்டறிவால், உண்மை இலவென்பார் இன்மை உளவென்பாச் அண்மை தொலைவென்பார் ஆம் ' எனத் தம்மின் உட்புலப்பாட்டை, துரவெண்பாட்டில் ஒழுக்கு வார் பாவலரேறு ! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/20&oldid=758186" இலிருந்து மீள்விக்கப்பட்டது