பக்கம்:உலகியல் நூறு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX உலகியல் நூறின் இரண்டாம் பாடல், மாறுபாட்டு நிலையை வலியுறுத்த எழுந்தது. நாமிருக்கும் நிலக்கோள், கதிரவமண்டிலக் குடும்ப வுறுப்பினுள் ஒன்று. கதிரவனேச் சார்ந்தியங்கும் பெருங் கோள்களாக அறிவியல் வரையறைப்படுத்தம் செய்த ஒன்பான் கோள்கள், ப்ளுட்டோ, நெப்டியூன், யுரேனசு, காரி, வியாழன், வெள்ளி, ஞாலம், செவ்வாய், அறிவன் என்பன ஆகும். அண்மையில் புதிய ஒரு கோளும் கதிரவ மண்டிலக் குடும்பத்துள் ஒர் உறுப்யெனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அக்கோளுக்கு அறிவியலார் . 1982 DV ' என்று பெயரிட்டுள்ளனர் ! 1929-ஆம் ஆண்டுவரை ப்ளுட்டோ என்னும் கோளொன்று கதிரவனேச் சுற்றி வருவதே அறிவியலாளர்க் குத் தெரியாது ! அதுவரை, எட்டுக்கோள்களே என்று அறுதியுரைத்து வந்தனர் ! கதிரவ மண்டில விளிம்பில் ஒரு கோள் தென்படுவதைத் தொலைநோக்காடியின் வழி டோம்பா' என்னும் பெயரிய அமெரிக்க வானியலறிஞனுன இளைஞன் ஒருவன் காணும் வரையில் அக்கூற்று நிலைத்தது. பின்னர் 1930-இல் ஒன்பது கோள்களே என வரையறைப் படுத்தப் பெற்றது ! இப்பொழுதோ, அது பத்தாகிவிட்டது ! நிலவுலகத்தைப் போன்று 1314 மடங்கினேத் தன் னகத்தே அடக்கிக் கொள்ளவல்ல வியாழக் கோளேச் சுற்றி வரும் துணைக்கோள்கள் நான்கு என, இன்றைக்கு முன்னூறு ஆண்டுகட்கு முன்னர் : கலிலீயோ ' கண்டார். அவை நான்கும் அறிவன் கோளேப் போன்ற பருமையன. ஆனால், வானறிவியல் வளர்ச்சியில், அத்துணைக் கோள்கள் பன்னி ாண்டு எனப் பின்னர் அறுதியிடப் பெற்றன. கதிரவ மண்டிலத்தில் சிறுகோள்களாக (Asteroids) நாற்பதினுயிரம் முதல் ஐம்பதினுயிரம் வரை அமைந்திருக்க வேண்டும் என, வானறிவியல் அறிஞர்களின் துாவல்முனேக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/22&oldid=758188" இலிருந்து மீள்விக்கப்பட்டது