பக்கம்:உலகியல் நூறு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi கணக்கீடு தெரிவிக்கின்றது. அவற்றில், ஈராயிரத்துக்கும் குறைவான சிறு கோள்களே இதுகாறும் வரையறைக்குட் பட்டுள்ளன ! நம் கதிரவக் குடும்பத் தொடர்பான கோள்நிலை வரை யறைகளின் மீதிலேயே இன்னும் வானியலாய்வு தொடர்ந்த படியுள்ளது. எனவே இன்னும் பல்லாயிரங் கோடிக் கோள் களும், கதிரவன் போலும் பல்லாயிரங்கோடி விண்மீன்களும் ஓரியைபிலும் எதிர்விலும் விசைந்தியங்கும் நிலையில், நம் மக்கள் கற்றேம் கல்லேம், ஆராய்வுற்றேம் என்றவாருக மாறு பட்டவாறு சொல்லிச் செல்லவே இவ்வுலகின்கண் இயலும் என்ற அரிய உண்மையை உறழ்ச்சி நிலைப்பாட்டின் உள் ளடக்கமாக்கி யிருக்கின்ருர், நூலாசிரியர் ! நினைவு மாந்தன் பெற்றுள்ள உணர்வுகள் பலவற்றுள்ளும் மிகவும் நெடியதும் நீளியதுமாகிய பேருணர்வு என்பது, அவன் தானே அமைந்து அமர்ந்து எண்ணிப் பார்த்தற்குரிய * நினைவு ' என்னும் ஒன்றேயாம். மிக நீளமாகக் குழப்ப மில்லாது உணர்வதற்குரிய வேறு நிலைகள் அதனினும் வேறில்லை என்னும் உண்மை, நிலேயிற் பெரிதாகும் நீள் நினேவு ’’ என்னும் பிழிவு வரியுள் வடிக்கப் பெற்றுள்ளது ! அரசும் குடியும் முடியரசு (Monarchy) செவ்விதாக அமைய வேண்டு மால்ை, அது மனநலஞ் செறிந்த மன்னனைக் கொண்டதாக வும், குடியரசு (Democracy) செவ்விதாக அமைய வேண்டு மால்ை அறிவுநலஞ் சான்ற குடிமக்களைக் கொண்டதாகவும், வல்லதிகார அரசு (Dictatorship) செவ்விதாக அமைய வேண்டுமானல் அது படைவலம் (வலி) நிறைந்ததாகவும், குழு ஆட்சி அரசு (Aristocracy) செவ்விதாக இருக்க வேண்டு. மெனில் அது மக்களினப் பற்று சான்ற ஆன்ருேரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/23&oldid=758189" இலிருந்து மீள்விக்கப்பட்டது