பக்கம்:உலகியல் நூறு.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii கொண்டதாகவும் பொருந்தி யிருக்க வேண்டும். அந்தந்த அரசுகளும் மேற்கண்ட நிலைகளுடன் பொருந்தியிருப்பினும், அஃததற்குரிய குடிகள் ' குடிமை நலம் பொருந்தியவர் களாகவிருந்து அவ்வவற்ருேடு ஒத்துப்போகும் வாய்ப்புகள் அமைந்திருந்தால் மட்டுமே, அது இயல்வதும் சிறப்புடையதும் ஆகும் என, அரசு நிலே விரிக்கும் அழகு தனிச் சிறப்புடைய தாகும். அடிமை, மடிமை, அறியாமை குற்றம்,-மிடிமை களவு கொலே மீளல் குடிமை (பா , 12 : 1-2) என, குடிமை நலம் என்பதற்குரிய விளக்கத்தைப் பிரிதோரிடத்தில் சுட்டுவார் ! ஒறுப்பு

  • ஒறுப்பு நிலே ' என்னும் தலைப்பின்கீழ், குற்றம் செய்வோரை நல்வழிப்படுத்தி வெவ்லும் வழியை மேற்கொள் ளாது, சொல்லால் எச்சரித்துக் கடிதல், தடியடி ஏவல், சிறைப்படுத்தல், உயிர் நீக்கத் தண்டனே போலும் தண்ட முறைகளே அரசு மேற்கொள்ளுதல் பயனின்றே (பா : 9: 2-4) என்ற நூலாசிரியர், அரசுக்குரிய கடமை களாகச் சுட்டும்பொழுது தண்டம் ' என்பதைத் தலையாய வற்றில் ஒன்ருகச் சுட்டி நிற்பார் !

குடிமைநலம் பொருந்திய மக்கட்குவேண்டிய உரிமையை யும், உழைப்பு உருவாக்கத்தையும், கல்வி வளர்ப்பையும், வேளாண்மை விரிவு செய்கையையும் பரக்கச் செய்யும் ஒரு நல்லரசு, அவற்றிற்குத் தடையாக நிற்கும் குற்றவாளிகளே முறைப்படி ஒறுக்காதுவிடின், இம்மேற்கண்ட இன்றியமை யாக் கடமைகளால் வருவதாகிய பொதுமை நலம் கேடுறு மாதலின், தண்டத்தையும் ஒரு கடமையாகத் தவிர்க்காது சேர்த்துள்ளார்! - . (நல்ல குடிமக்களைக் காத்தற்கு, அரசனைவன் கொடிய வரைக் கொலேயே செய்தல் வேண்டும்! அது களே களைவதைப் போன்றது என்னும் வள்ளுவர் வாய்மொழி ஈண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/24&oldid=758190" இலிருந்து மீள்விக்கப்பட்டது