பக்கம்:உலகியல் நூறு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii; ஒப்புநோக்கற்குரியது (கொலேயிற் கொடியாரை வேந் தொறுத்தல் பைங்கூழ் களே கட் டதனுெடு நேர். (குறள் : 550). திருவள்ளுவரும் தண்டத்தை வேண்டா வென்னவில்லே! அரசனின், கையிகந்த தண்டத்தையே கடிகின்ருர் (ஒ. நோ.: கையிகந்த தண்டம், குறள்: 567) என்பது இங்கு கருதற்குரியது !! அரசின், இம்மேற்கண்ட கடமைத் தொடர்பான நிலை களேத் தவிர்த்து, அறியாமையாலும் அழுக்காற்றிலுைம் தீமை புரியும் குடிமக்களில் ஒரு சிலராகிய புன்மையாளரை நல்வழிப் படுத்தி, நாட்டந் திசை திருப்பித் திருத்துதலே ஏற்றதாம் என்னும் ஆசிரியர் கருத்து, இங்கு ஒப்பிட்டு ஊன்றிப் பார்த்து உணர வேண்டியதாகும் ! ஆனையும், பூனையும் ஆளுமைக் கட்டிலே எவ்வழியாலோ பற்றியேறிவிட்ட, மக்கள் நல நாட்டமற்ற ஆளவந்தார், தமக்கேற்ற நிலையில் முன்னறிவோடு கூடி தம்முடைய அதிகாரத் துணேயை வைத்துக் கொண்டு, உருவாக்கிக் கொள்ளுவனவே சட்டங் களாகின்றன! (இவ்விடத்தில், முன் அரசு உருவாக்கி வைத்த சட்டங்களில் திருத்தம் ஏற்படுத்திக் கொள்ளும் இக்கால அரசியல் சூழ்ச்சிகளேயும் கருத்திற் கொள்ள வேண்டும்!) இக்கால் நடக்கின்ற அரசியல் கூத்தடிப்புகட்கிடையில் நடக்கும் இவ்வகைத் திருட்டுத்தனத்தை அறியா மக்கள் உணராவாறு பல்வகைத் திசை திருப்பங்களும் செய்யப் பெறுகின்றமையையும் கூர்ந்து நோக்குவோர் உணர்வர் ! ஆளவந்தவர், தமக்குச் சார்பாய் உருவாக்கிக் கொள்ளும் நெறிமுறைகளே சட்டங்களாக உலவுகின்றன என்பதை விளக்குகையில், ஆனேக்குழுசெய் யறநெறி, ஆங்கோர், ஏழைப் பூனக்கு உதவும் எனல் பொய் ' (பா 7:3-4) என, அரிய ஒப்புமை காட்டிச் சாடி நிற்கும் நூலாசிரியரின் திறம் போற்றுதற் குரியதாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/25&oldid=758191" இலிருந்து மீள்விக்கப்பட்டது