பக்கம்:உலகியல் நூறு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiν யாருக்கு யார் காவல் ? நாட்டியலில் அரண்நிலை கூறவந்த நூலாசிரியர், ஒரு நாட்டினே ஆள்வோர்க்குத் தன்னுற்றலே வலிந்த அரண் என்று வலியுறுத்தி நின்றவாறே, மேலும் சில அரண்களேயும் அட்டியலிடுகின்ற அழகு, மிகப் பயய்ை அமைந்திருக்கின்றது! சேய்க்குத் தாய் கன்னிதந்தை சேயிழைக்கு வன்கணவன் ’ (பா : 8 : 1) என வரும் முதல் வரியில் உள்ள இரண்டாவது குறிப்பு தமிழிலக்கிய வுலகிற்கே மிகப் புதியது : தந்தையை இழந்த அல்லது ஈடுபாடற்ற நிலையில் தந்தை திரிந்து கொண் டுள்ள குடும்பங்களில் கன்னிப் பெண்கள் பெரும்பாலும் தம் தாயரை அன்பாலும் நடைமுறையாலும் ஏமாற்றி ஏய்த்து அல்லது உடன்படுமாறு செய்து தடம் புரண்டு விடுவதற்கு அவ்வளவு வாய்ப்புகள் உள்ளன : அன்பும் மென்மையும் ஆர்ந்துறையும் தாயர், தட்டிக் கேட்கவும் அதட்டிக் கேட்க வும் கூட அமைவில்லாத பொதுநிலை மனத்தைப் பெற்றவ ராகையால், கன்னியரான தம் பெண்டிர்க்கு அரணுக விளங்கும் தகுதியற்றவராகவே பெரும்பாலும் அமைந்திருப் பர் ! தந்தை நிலை அப்படியன்று ! அவன் புறவுலகத்தே புழங்குபவன். உலகியல் சூழலில் உழன்று உலவும் ஒவ் வொரு தந்தையும் தம் கன்னியரான மக்கள் கன்னிமை எய்தியதிலிருந்து அவர்களைக் கட்டிக் கொடுப்பது வரையி லான அவ்வளவு காலமும் மிகுந்த எச்சரிக்கையுடனும், உறத்த கவனத்துடனும்தான் இயங்குவான். அவளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரும் முனேவுடனேயே இருப் பான் ! எனவே, தந்தையே தம் மகளான கன்னியொருத். திக்கு வன்காவலாக இருப்பான் அல்லது இருந்தாக வேண் டும் என்னும் பொருள்பட கன்னி தந்தை' என அரணில் காட்டுவார், இந்நூலாசிரியர். - கன்னிக்குத் தந்தையோல், மணமான ஒரு பெண்ணுக்கு வலிய அரண் அவளின் கணவனே என்று சுட்ட வந்தவர், வெறுங் கணவனுக மட்டும் அவளுக்கு அவன் அமைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/26&oldid=758192" இலிருந்து மீள்விக்கப்பட்டது