பக்கம்:உலகியல் நூறு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼Xy திருந்தால் போதாது, அவன் வலிமையுடைய கணவனுக இருந்தாக வேண்டும் என்று அழுத்தம் தருவார் ! வன் கணவன் என்னும் சொல்லில் பயிலப் பெற்றுள்ள வல் என்னும் முன் அடைமொழி அவ்வளவு பொருட் சாமுடைய தாகும்! வல் என்னும் மூலச் சொல்லுக்குரிய வலிமை, வன்மை, இயலுகை, ஆற்றல், திண்மை ஆகிய அனேத்துப் பொருட்கூறுகளேயும் அடக்கிய தன்மையகை கணவன் இருந்தால்தான், ஒரு பெண்ணுக்கு உண்மையாகவே அவனுல் வலிய அரணுக விளங்க இயலும் என்னும் பொருள் விளங்க சேயிழைக்கு வன்கணவன் என்பார். இல் லெனில், அவன் கணவனுக இருக்கலாம் ; காவலனுக இருக்க இயலாதென்னும் உட்குறிப்பும் உள்ளுள்ளது ! ஒழுக்கம் > பசியின்மை ஒழுக்க நிலை என்னும் தலேப்பின்கீழ், ஒழுக்கம் என்பது இன்னது எனவும், அது எவற்றின் துனேயால் குலேவுபடாமல் இருக்கவல்லது என்பதையும் ஆழமாகக் கோடிட்டு உள்ளார்: * ஒழுக்கம் பசியின்மை ...... ' (பா. 15 : 1) என்ற பாத் தொடக்கமே நமக்கு ஒருண்மையைக் கதுமெனக் காட்டி விடுகின்றது ! உலகத்தின்கண் நடக்கும் பெரும்பாலான ஒழுக்கக்கேடுகள் வறுமையின் உச்சகட்டமாகிய பசியுணர்ச்சி யால் விளைவனவே குடிகளிடம் பசியைப் போக்கிவிட்டால் பெரும்பாலும் ஒழுக்கச் சிதைவுகள் சிதர்ந்து விலகிவிடும் என்ற குறிப்பை, பாடலின் முதலிரண்டு சீர்களே மூச்சுயிர்த் துக் காட்டி விடுகின்றன. . . . ஒரு மாந்தனின் பசியைப் போக்கி, அவன் ஊன்றிச் செய்தற்குரிய தொழில் அவனுக்கு வாய்ப்பாக ஏற்படுத்திக் கொடுத்து, அறிவையும் புகட்டி விட்டால், அவனுக்கு, ஒழுக் கத்தினின்றும் பிசகிவிட வாய்ப்பில்லாது போய்விடும் என்னும் அருமையான வழிமுறையை இந்நூலாசிரியர் குறிக் கின்ருர் பொது மாந்தர் அனைவரும், இந்த நிலகளே உரு வாக்கித் தருவதொன்ருலேயே ஒழுக்கமாக இருப்பார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/27&oldid=758193" இலிருந்து மீள்விக்கப்பட்டது